செய்திகள்

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணிக்குப் புதிய பயிற்சியாளர் நியமனம்!

மேற்கிந்தியத் தீவுகள் அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் பில் சிமன்ஸ், ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக...

எழில்

மேற்கிந்தியத் தீவுகள் அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் பில் சிமன்ஸ், ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கு முன்பு முன்னாள் இந்திய வீரர் லால்சந்த் ராஜ்புத், ஆப்காஸ்னிதான் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். ஆனால் மூன்றே மாதங்களில் அவருடனான ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் சிமன்ஸ் ஆப்கானிஸ்தான் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். 2019 வரை இவர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். 

இதற்கு முன்பு அயர்லாந்து, மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்குப் பயிற்சியாளராக சிமன்ஸ் பணியாற்றியுள்ளார். கடந்த வருடம் ஆப்கானிஸ்தான் அணியின் ஆலோசகராகவும் பணியாற்றியதால் தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கு அவரைத் தேர்வு செய்வது சுலபமான முடிவாக இருந்துள்ளது.

சிமன்ஸ், மேற்கிந்தியத் தீவுகள் அணிக்காக 26 டெஸ்டுகள் மற்றும் 143 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆகஸ்ட் மாத எண்கணித பலன்கள் - 2

ஆகஸ்ட் மாத எண்கணித பலன்கள் - 1

இன்டர்நேஷ்னல் பீர் டே... திவ்ய பிரபா!

நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட தொடக்க விழா! மேடையில் M.L.A. - M.P. வாக்குவாதம்!

ஒரே ஓவரில் 45 ரன்கள்... 43 பந்தில் 153 ரன்கள் குவித்த ஆப்கன் வீரர்!

SCROLL FOR NEXT