செய்திகள்

டெஸ்ட்: முதல்நாளின் முடிவில் மீண்டு வந்த ஆஸ்திரேலியா! குக், மலான் அரை சதங்கள்!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5-வது டெஸ்டில் இங்கிலாந்து அணி 5 விக்கெட் இழப்புக்கு 233 ரன்கள் எடுத்துள்ளது...

எழில்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5-வது டெஸ்டில் இங்கிலாந்து அணி 5 விக்கெட் இழப்புக்கு 233 ரன்கள் எடுத்துள்ளது.

ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் 5-வது மற்றும் கடைசி போட்டி ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் இன்று தொடங்கியுள்ளது. 

இத்தொடரின் முதல் 3 ஆட்டங்களில் வென்று ஆஸ்திரேலியா ஏற்கெனவே தொடரை கைப்பற்றிய நிலையில், 4-ஆவது ஆட்டத்தை டிரா செய்தது இங்கிலாந்து. கடைசி ஆட்டத்திலும் இங்கிலாந்தை வீழ்த்த ஆஸ்திரேலியா முனைப்புடன் உள்ளது. அதேநேரம், ஆறுதல் வெற்றியாவது அடைய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது இங்கிலாந்து.

டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, பேட்டிங்கைத் தேர்வு செய்தது. 

மழையால் ஆட்டம் தாமதமாகத் தொடங்கியது. 24 பந்துகளில் 24 ரன்கள் எடுத்த ஸ்டோன்மேனை வீழ்த்தினார் கம்மின்ஸ். நிதானமாக விளையாடி வந்த குக்குக்கு நல்ல இணையாக இருந்த வின்ஸ், 25 ரன்களில் வெளியேறினார். அடுத்தச் சில ஓவர்களில் 39 ரன்களில் உறுதியுடன் விளையாடி வந்த குக்கின் விக்கெட்டை வீழ்த்தினார் ஹேஸில்வுட். ஆஸ்திரேலிய அணியின் சிறப்பான பந்துவீச்சால் இங்கிலாந்து அணியால் விரைவாக ரன்கள் குவிக்கமுடியவில்லை. இதனால் மிகவும் கவனமுடன் விளையாடி வருகிறார்கள். 

தேநீர் இடைவேளையின்போது இங்கிலாந்து அணி, 42 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 122 ரன்கள் எடுத்துள்ளது. ரூட், மலான் 16 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள். 

அதன்பிறகு இருவரும் சிறப்பாக விளையாடி ரன்கள் சேர்த்தார்கள். ரூட் 82 பந்துகளிலும் மலான் 146 பந்துகளிலும் அரை சதமெடுத்தார்கள். 80 ஓவர்களுக்குப் பிறகு புதிய பந்தைக் கையில் எடுத்தது ஆஸ்திரேலியா. இதற்கு உடனே பலன் கிடைத்தது. 3 விக்கெட் இழப்புக்கு 228 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் இங்கிலாந்து இருந்தபோது திருப்பம் ஏற்பட்டது.

கிட்டத்தட்ட முதல் நாள் முடிவடையும் தருவாயில் ஸ்டார்க் பந்துவீச்சில் மார்ஷின் அபாரமான கேட்சினால் ரூட் 83 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்தவந்த பேர்ஸ்டோவ் ஹேஸில்வுட் பந்துவீச்சில் 5 ரன்களில் வீழ்ந்தார். 

முதல்நாள் முடிவில் 81.4 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 233 ரன்கள் எடுத்துள்ளது. மலான் 55 ரன்களுடன் களத்தில் உள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிகார் காங்கிரஸ் எம்.பி.யின் மகனை ஏலத்தில் எடுத்த கேகேஆர்!

பிரதமர் மோடிக்கு உயரிய விருது! எத்தியோப்பிய பிரதமர் அபி அகமது வழங்கினார்

ஊரக வேலைவாய்ப்புத் திட்ட பெயர் மாற்றம்! காங்கிரஸ் எம்பிக்கள் ஆலோசனை!

புயல் காற்றால் உடைந்து விழுந்த சுதந்திர தேவி சிலை!

பூந்தமல்லி - போரூர் மெட்ரோ இயக்க ரயில்வே வாரியம் ஒப்புதல்! ஜனவரிமுதல் இயக்கம்!

SCROLL FOR NEXT