செய்திகள்

இலங்கை ஒருநாள் அணியின் கேப்டனாக ஏஞ்செலோ மேத்யூஸ் மீண்டும் நியமனம்!

இலங்கையின் அணியின் புதிய பயிற்சியாளர் சண்டிகா ஹதுருசிங்காவின் வேண்டுகோளை ஏற்று மீண்டும் கேப்டன் பொறுப்பை...

எழில்

கடந்த ஜூலை மாதம், ஜிம்பாப்வேக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் தோற்றதைத் தொடர்ந்து இலங்கை கேப்டன் ஏஞ்செலோ மேத்யூஸ் தனது பதவியை ராஜிநாமா செய்தார். இதையடுத்து இலங்கை டெஸ்ட் கேப்டனாக தினேஷ் சன்டிமலும், ஒரு நாள் போட்டி மற்றும் டி20 போட்டியின் கேப்டனாக உபுல் தரங்காவும் நியமிக்கப்பட்டார்கள். 

சாம்பியன்ஸ் டிராபி போட்டியிலிருந்து ஆரம்பக்கட்ட சுற்றோடு வெளியேறிய இலங்கை அணி, ஜிம்பாப்வேக்கு எதிரான ஒரு நாள் தொடரை 2-3 என்ற கணக்கில் இழந்தது. இதையடுத்து கேப்டன் பதவியிலிருந்து விலகினார் மேத்யூஸ்.

இந்நிலையில் இலங்கை ஒருநாள் அணியின் கேப்டனாக மேத்யூஸ் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கையின் அணியின் புதிய பயிற்சியாளர் சண்டிகா ஹதுருசிங்காவின் வேண்டுகோளை ஏற்று மீண்டும் கேப்டன் பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ளார் மேத்யூஸ். 2019 உலகக் கோப்பை வரை இலங்கை ஒருநாள் அணியின் கேப்டனாக மேத்யூஸ் நீடிப்பார் என்று அறியப்படுகிறது. இந்நிலையில் இலங்கை டெஸ்ட் அணியின் கேப்டன் பதவியை தினேஷ் சன்டிமல் தக்கவைத்துக்கொண்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பள்ளியில் பெண்கள் பாதுகாப்பு விழிப்புணா்வு முகாம்

இந்தியாவுக்கும் தென்னாப்பிரிக்காவுக்கும் என்ன வித்தியாசம்? ரசிகை ஆவேசம்

Untitled Nov 03, 2025 10:37 pm

இறுதி வரை முன்னேறினாலும்... தென்னாப்பிரிக்காவைத் துரத்தும் சோகம்!

கொண்டாட்ட நாள்... சம்யுதா!

SCROLL FOR NEXT