செய்திகள்

2-வது ஒருநாள் ஆட்டம்: பாகிஸ்தான் 246 ரன்கள்!

எழில்

நியூஸிலாந்துக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி 246 ரன்கள் எடுத்துள்ளது.

நெல்சனில் நடைபெற்றும் வரும் 2-வது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங்கைத் தேர்வு செய்தது. ஆனால் அந்த அணி 141 ரன்களுக்குள் 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பிறகு 8-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த முகமது ஹபிஸும் ஷதாப் கானும் அரை சதமெடுத்து அணியை சரிவிலிருந்து காப்பாற்றினார்கள். 9-வதாகக் களமிறங்கிய ஹசன் அலி 4 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 31 பந்துகளில் 51 ரன்கள் எடுத்து அசத்தினார். இதனால் பாகிஸ்தான் அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 246 ரன்கள் என்கிற கெளரவமான ஸ்கோரை எடுத்தது.

இதன்பிறகு விளையாடி வரும் நியூஸிலாந்து 14 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 64 ரன்கள் எடுத்துள்ளது. கப்தில் 31, டெய்லர் 14 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள். மழையால் ஆட்டம் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல் நேரலை: செய்தியாளர்களை சந்திக்கிறார் ராகுல்

வயநாடு: 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் ராகுல் முன்னிலை!

’மீண்டும் பயிற்சியாளராக விருப்பமில்லை’: ராகுல் டிராவிட்!

சநாதனத்துக்கு கிடைத்த வெற்றி: கங்கனா ரணாவத்!

உ.பி.: அகிலேஷ், மனைவி டிம்பிள் யாதவ் முன்னிலை!

SCROLL FOR NEXT