செய்திகள்

3-ஆவது ஒரு நாள் ஆட்டத்தில் பாகிஸ்தான் படுதோல்வி

DIN

பாகிஸ்தானுக்கு எதிரான 3-ஆவது ஒரு நாள் ஆட்டத்தில் 183 ரன்கள் வித்தியாசத்தில் நியூஸிலாந்து வெற்றி பெற்றது. இதையடுத்து, 5 ஒரு நாள் ஆட்டங்கள் கொண்ட தொடரை 3-0 என்ற கணக்கில் நியூஸிலாந்து கைப்பற்றியது. இதற்கு முன்பு நடைபெற்ற 2 ஒரு நாள் ஆட்டங்களிலும் நியூஸிலாந்து அணி வெற்றி பெற்றது.
5 ஒரு நாள், 3 டி20 ஆட்டங்களில் விளையாட நியூஸிலாந்தில் பாகிஸ்தான் அணி சுற்றுப் பயணம் மேற்கொண்டிருக்கிறது. ஏற்கெனவே, 2 ஒரு நாள் ஆட்டங்கள் முடிந்துவிட்டன. இந்நிலையில், சனிக்கிழமை நடைபெற்ற 3-ஆவது ஒரு நாள் ஆட்டத்தில் நியூஸிலாந்து அணி டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்வு செய்தது.
அந்த அணி 50 ஓவர் முடிவில் 257 ரன்கள் எடுத்தது. இதையடுத்து, 258 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் 27.2 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 74 ரன்களில் சரணடைந்தது. முன்னதாக, நியூஸிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான மார்ட்டின் கப்டில் (45 ரன்கள்), காலின் மன்றோ (8 ரன்கள்) ஆட்டமிழந்தனர். இதையடுத்து, கேப்டன் கேன் வில்லியம்சன் களம் இறங்கி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவருடன் ராஸ் டெய்லர் களம் இறங்கி தோள் கொடுத்தார். வில்லியம்சன் 73 ரன்கள் எடுத்திருந்தபோது ரயீஸ் பந்துவீச்சில் ஹஃபீஸிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இதையடுத்து, டெய்லருடன் விக்கெட் கீப்பர் டாம் லதாம் ஜோடி சேர்ந்தார். அரைசதம் கடந்த டெய்லர், 42.3-ஆவது ஓவரில் ஷதாப் கான் பந்துவீச்சில் எல்பிடபிள்யூ ஆனார். லதாம் 35 ரன்களிலும், இதர வீரர்கள் சொற்ப ரன்னும் ஆட்டமிழந்தனர். பந்துவீச்சாளர் ஃபெர்குசன் 6 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். பாகிஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக ரயீஸ், ஹசன் அலி தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதையடுத்து ஆடிய பாகிஸ்தான் வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க அந்த அணி 74 ரன்களில் சுருண்டது. நியூஸிலாந்தின் போல்ட் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தோ்வு: கரூரில் இன்று 12,736 போ் எழுதுகிறாா்கள்

மேட்டுப்பாளையம் பகுதியில் பலத்த மழை: 5 ஆயிரம் வாழை மரங்கள் சேதம்

மாநில இளைஞா் விருது: விண்ணப்பிக்க ஆட்சியா் அழைப்பு

சட்டப் படிப்புகளில் சேர மே 10 முதல் விண்ணப்பிக்கலாம்

வெளிநாட்டு உயிரினங்கள் வளா்ப்பு நெறிமுறை: பொது மக்கள் கருத்து தெரிவிக்க அழைப்பு

SCROLL FOR NEXT