செய்திகள்

5-0: பாகிஸ்தானை மீண்டும் வீழ்த்தியது நியூஸிலாந்து

எழில்

பாகிஸ்தானுக்கு எதிரான 5-வது ஒருநாள் போட்டியையும் வென்று 5-0 என ஒருநாள் தொடரை வென்றுள்ளது நியூஸிலாந்து அணி.

வெலிங்டனில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி, பேட்டிங்கைத் தேர்வு செய்தது. அது சரியான முடிவு என்பதுபோல 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 271 ரன்கள் எடுத்தது. தொடக்க வீரர் கப்தில் 126 பந்துகளில் 100 ரன்கள் எடுத்தார். டெய்லர் 59 ரன்கள் எடுத்ததால் பெரிய ஸ்கோரை எட்டி பாகிஸ்தான் அணிக்குச் சவால் அளித்தது நியூஸிலாந்து. பாகிஸ்தான் தரப்பில் ரயீஸ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

பாகிஸ்தான் அணிக்குச் சரியான தொடக்கம் அமையாதது பின்னடைவை உருவாக்கியது. 57 ரன்களுக்கு முதல் 5 விக்கெட்டுகளை இழந்தது. ஆனால் பின்வரிசை வீரர்கள் நியூஸிலாந்து பந்துவீச்சை நன்கு எதிர்கொண்டார்கள். ஹாரிஸ் சொஹைல், சதப் கான் அரை சதமெடுத்தார்கள். ஃபகீம் அஷ்ரப் 23, ஆமிர் யாமின் 32, முகமது நவாஸ் 23 ரன்கள் எடுத்து கடைசிக்கட்டத்தைப் பரபரப்பாக்கினார்கள். எனினும் பாகிஸ்தான் அணி 49 ஓவர்களில் 256 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. நியூஸிலாந்தின் ஹென்றி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

5-வது ஒருநாள் போட்டியை 15 ரன்களில் வென்ற நியூஸிலாந்து, ஒருநாள் தொடரை 5-0 என்கிற கணக்கில் வெற்றியடைந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பழனி கோயிலுக்கு ரூ.36.51 லட்சத்துக்கு கரும்பு சா்க்கரை கொள்முதல்

கழனி உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தில் வேளாண் மாணவிகளுக்கு பயிற்சி

திரௌபதி அம்மன் கோயில் திருவிழா மே 13-இல் தொடக்கம்

விறுவிறுப்படையும் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

பளியா் பழங்குடியினா் இதுவரை அரசு பணி வாய்ப்பே பெறவில்லை

SCROLL FOR NEXT