செய்திகள்

ஆஸ்திரேலியன் ஓபன்: வெளியேறினார் நடால்

DIN

ஆஸ்திரேலியன் ஓபன் காலிறுதிச் சுற்று ஆட்டத்தில் காயம் காரணமாக தொடர்ந்து விளையாட முடியாமல் 5-ஆவது செட்டில் விலகுவதாக ஸ்பெயினின் ரஃபேல் நடால் அறிவித்தார்.
எனவே, செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில், 3-6, 6-3, 6-7 (5-7), 6-2, 2-0 என்ற செட் கணக்கில் குரோஷியாவின் மரீன் சிலிச் வெற்றி பெற்றார். சர்வதேச ஒற்றையர் தரவரிசையில் முதல் இடத்தில் உள்ள வீரரும், ஆஸ்திரேலியன் ஓபன் முன்னாள் சாம்பியனுமான நடால், கடந்த ஆண்டு இறுதிச்சுற்று வரை முன்னேறி தோல்வியைச் சந்தித்தார் என்பது நினைவுகூரத்தக்கது. இதற்கு முன்பு ஆஸ்திரேலியன் ஓபனில் கடந்த 2010-ஆம் ஆண்டில் முழங்கால் காயம் காரணமாக நடால் விலகினார். மரீன் சிலிச், 2-ஆவது முறையாக அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
காலிறுதியில் போபண்ணா ஜோடி: இதனிடையே, கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோஹன் போபண்ணா-ஹங்கேரியா வீராங்கனை டி.பாபோஸ் ஜோடி, செவ்வாய்க்கிழமை நடைபெற்ற 4-ஆவது சுற்று ஆட்டத்தில் 6-4, 6-4 என்ற நேர் செட் கணக்கில், அமெரிக்காவின் வனியா கிங்-குரோஷியாவின் ஃபிராங்கோ ஜோடியை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது.
மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதிச் சுற்றில் டென்மார்க்கின் கரோலின் வோஸ்னியாக்கி, 6-0, 6-7 (3-7), 6-2 என்ற செட் கணக்கில் ஸ்பெயினின் சி.எஸ்.நவாரோவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

செந்தில் பாலாஜி வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் மன்னிப்புக் கேட்ட அமலாக்கத்துறை

சென்னையில் வாட்டும் வெயில் மட்டுமா.. குடிநீர் தட்டுப்பாடும் வருமா? ஏரிகளின் நீர்மட்ட நிலவரம்!

சென்னைக்கு கோடையில் குடிநீர் தட்டுப்பாடு வர வாய்ப்பு இல்லை

வெங்கடேஷ் பட்டின் ‘டாப் குக்கு டூப் குக்கு’!

ஆவடி இரட்டைக் கொலை நடந்த இடத்தில் கிடைத்த செல்ஃபோன் யாருடையது? தீவிர விசாரணை

SCROLL FOR NEXT