செய்திகள்

2008-ல் சிஎஸ்கே அணியின் கேப்டனாக என். சீனிவாசன் முதலில் தேர்வு செய்த வீரர் தோனி அல்ல!

1.5 மில்லியன் டாலரைத் தாண்டி தோனிக்காகச் செலவு செய்யமுடியாது. அப்படிச் செலவு செய்தால் நல்ல வீரர்கள் கொண்ட அணியை...

எழில்

இது ஆச்சர்யமான தகவல். 2008-ல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக என். சீனிவாசன் தேர்வு செய்த வீரர், தோனி அல்ல. இத்தகவலைக் கூறியிருப்பவர், முன்னாள் வீரர் வி.பி. சந்திரசேகர். இவர், 2008-ல் சென்னை அணியின் தேர்வுக்குழுவின் தலைவராகவும் அதன் செயல்திட்டங்களுக்கு இயக்குநராகவும் இருந்தார். 

2008-ல் ஏலத்தில் தோனியைத் தேர்வு செய்வதற்கு முன்பு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் நடைபெற்ற உரையாடல்கள் குறித்து ஓர் இணையத்தளத்துக்கு வி.பி. சந்திரசேகர் பேட்டியளித்திருப்பதாவது:

2008 ஏலத்துக்கு முன்பு என். சீனிவாசன் (அப்போதைய சிஎஸ்கே அணியின் இணை உரிமையாளர்) என்னிடம் கேட்டார். யாரைத் தேர்வு செய்யப்போகிறாய்?

தோனி என்று பதிலளித்தேன்.

சேவாக்கை ஏன் தேர்வு செய்யக்கூடாது என்றார். 

ரசிகர்கள் எதிர்பார்க்கும் ஓர் ஊக்கத்தை சேவாக்கால் தரமுடியாது. ஆனால் தோனி கேப்டனாக மட்டுமல்லாமல் விக்கெட் கீப்பராகவும் பேட்ஸ்மேனாகவும் இருப்பவர். அவரால் மேட்ச்சைத் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரமுடியும். அவரை நான் தேர்வு செய்யலாமா என்று கேட்டேன்.

இருந்தாலும் நான் சேவாக்கையே தேர்வு செய்வேன் என்றார் சீனிவாசன். ஆனால் அடுத்த நாள் என்னிடம் வந்து, ஓகே. தோனியைத் தேர்வு செய்துகொள் என்றார்.

ஒட்டுமொத்த அணிக்கும் 5 மில்லியன் டாலர் பட்ஜெட் தான் இருந்தது. தோனிக்காக ரூ. 1.1 மில்லியன் டாலர் செய்யலாம் என இருந்தோம். ஆனால் வேறு சில அணிகளும் 1.3 மில்லியன் டாலருக்கு தோனியைத் தேர்வு செய்யவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகின. உடனே எங்கள் திட்டத்தை மாற்றியமைத்தோம். எனவே தோனிக்காக 1.4 மில்லியன் டாலர் செய்யலாம் என முடிவெடுத்தோம். ஆனால் ஏலம் நெருங்க நெருங்க தோனி 1.8 மில்லியன் டாலருக்கும் தேர்வு செய்யப்படலாம் எனத் தகவல்கள் வெளியாகின.

உடனே நான் சீனிவாசனிடம் சொன்னேன், 1.5 மில்லியன் டாலரைத் தாண்டி தோனிக்காகச் செலவு செய்யமுடியாது. அப்படிச் செலவு செய்தால் நல்ல வீரர்கள் கொண்ட அணியை உருவாக்கமுடியாது. அணியில் தோனி மட்டும்தான் இருப்பார். வேறு யாரும் கிடைக்கமாட்டார்கள் என்றேன். இதனால் சீனிவாசன் ஏமாற்றமடைந்தார் என்று வி.பி. சந்திரசேகர் பேட்டியளித்துள்ளார்.

2008-ல் நடைபெற்ற ஏலத்தில் 1.5 மில்லியன் டாலருக்கு தோனியைத் தேர்வு செய்தது சென்னை சூப்பர் கிங்ஸ்.

காலங்கள் உருண்டோட, இந்தமுறை தோனியை மீண்டும் தக்கவைத்துள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. இப்போது, தோனிக்கு வழங்கப்படவுள்ள தொகை - ரூ. 15 கோடி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சாணைக்கல்லில் சிந்து எழுத்துகள்: தூத்துக்குடி பட்டினமருதூரில் கண்டெடுப்பு

எல்லீஸ் நகா் பகுதியில் நாளை மின் தடை

வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தம்: கணக்கீட்டுப் படிவம் பெறும் பணி நிறைவு!

மழை ஓய்ந்தும் வடியாத நீரால் அழுகும் நெற்பயிா்கள்: விவசாயிகள் வேதனை!

ஆஸ்திரேலிய பயங்கரவாதத் தாக்குதல்: பலி எண்ணிக்கை 15 ஆக உயர்வு!

SCROLL FOR NEXT