செய்திகள்

விளையாட்டுப் பயிற்சியாளர்களுக்கான ஊதிய வரம்பு ரூ.2 லட்சமாக உயர்வு

DIN

பல்வேறு விளையாட்டுகளில் உள்ள பயிற்சியாளர்களுக்கு ஊதிய வரம்பு ரூ.2 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது என மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் ராஜ்யவர்த்தன் சிங் ரத்தோர் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை பல்வேறு துணைக்கேள்விகள் மீதான விவாதத்தின் போது அவர் கூறியதாவது:
விளையாட்டு பயிற்சியாளர்களின் ஊதிய வரம்பு ரூ.1 லட்சமாக வரையறுக்கப்படவில்லை. மத்திய அரசு அத்தொகையை ரூ.2 லட்சமாக உயர்த்தியுள்ளது.
தற்போதைய சூழலில் ரூ.1 லட்சம் என்பது போதுமானதாக இல்லை. மேலும் வெளிநாட்டுப் பயிற்சியாளர்கள் அதிகம் ஊதியம் ஈட்டுகின்றனர். இதனால் ஊதிய வரம்பு உயர்த்தப்படுகிறது. மேலும் பதக்கம் வெல்லும் வீரர்களுக்கு தரப்படும் ஊக்கத் தொகையும், மூன்று நிலைகளில் தரப்படும். அடிமட்ட, பள்ளி நிலையில் பயிற்சி அளிப்போருக்கும் ஊக்கத் தொகை தரப்படும் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே. 9-ல் விஜயகாந்திற்கு பத்மபூஷண் விருது!

நாடு முழுவதும் ராகுல் காந்திக்கு அமோக வரவேற்பு: சஞ்சய் ரௌத்

கைகளில் செம்புடன் கர்நாடக முதல்வர் தலைமையில் அமைச்சர்கள் தர்னா

வில்வித்தையில் இந்தியாவின் தீபிகா குமாரிக்கு வெள்ளிப் பதக்கம்

82 ஆண்டுகளுக்குப் பிறகு கோதண்டராமசுவாமி கோயில் மகாகும்பாபிஷேகம்!

SCROLL FOR NEXT