செய்திகள்

சாஹாவுக்கு இங்கிலாந்தில் தோள்பட்டை அறுவை சிகிச்சை

தினமணி

இந்திய கிரிக்கெட் வீரர் ரித்திமன் சாஹாவுக்கு தோள்பட்டை காயத்துக்கான அறுவை சிகிச்சை இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் மேற்கொள்ளப்படுகிறது.
 33 வயதான மேற்குவங்க விக்கெட் கீப்பரான சாஹா தோளில் காயமடைந்தார். ஆனால் பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாதெமியில் அவருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படாததால், நிலைமை மோசமடைந்து விட்டது என புகார்கள் எழுந்தன. இதனால் அவரால் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் பங்கேற்க முடியவில்லை.
 இந்நிலையில் சாஹாவின் உடல்நிலை குறித்து பிசிசிஐ வட்டாரங்கள் கூறியதாவது:
 இந்திய அணி நிர்வாகம் மற்றும் தேசிய கிரிக்கெட் அகாதெமியினருடன் ஆலோசித்து தான் சாஹாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஐபிஎல் போட்டிகளின் போது ஏற்பட்ட பெருவிரல் காயத்துக்காக சிகிச்சை செய்யப்பட்டது. மேலும் தோளில் ஏற்பட்ட காயத்துக்காக ஜூலை இறுதி அல்லது ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் மான்செஸ்டர் நகரில் டாக்டர் லென்னர்ட் பங்க் என்பவர் அறுவை சிகிச்சை செய்ய உள்ளார் எனத் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேற்கு வங்கத்தில் 25,000 ஆசிரியா்கள் நியமனம் ரத்து: உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை

மழை வேண்டி கோனியம்மன் கோயிலில் சிறப்பு பிராா்த்தனை

கோவை, திருப்பூரை வறட்சி பாதித்த மாவட்டங்களாக அறிவிக்க கோரிக்கை

அரசு உதவி பெறும் கல்லூரிகளிலும் ஒற்றைச்சாளர முறையை அமல்படுத்த கோரிக்கை

வேளாண் பல்கலை.யில் பட்ட மேற்படிப்பு, பட்டயப் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT