செய்திகள்

38 ஆண்டுகால கிரிக்கெட் சாதனையை முறியடித்தார் பாக்., வீரர்!

DIN

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் குறைந்த இன்னிங்ஸில் 1000 ரன்களை எட்டிய வீரர் என்ற விவியன் ரிச்சர்ட்டிஸின் 38 ஆண்டுகால சாதனையை ஃபகார் ஸமான் ஞாயிற்றுக்கிழமை முறியடித்தார்.

பாகிஸ்தான் ஒருநாள் கிரிக்கெட் அணியில், கடந்த ஆண்டு ஐசிசி நடத்திய சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஃபகார் ஸமான் தொடக்க வீரராக அறிமுகமானார். அவர், அறிமுக தொடரிலேயே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதில், இந்தியாவுடனான இறுதிப்போட்டியில் சதம் அடித்து அந்த அணி சாம்பியன்ஸ் டிராபியை வென்றதில் முக்கிய பங்காற்றினார். இதன்மூலம், அவர் அணியில் தொடர்ந்து நீடித்தார்.

அவர், தற்போது ஜிம்பாப்வே அணியுடனான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இந்த தொடரின் 4-ஆவது ஒருநாள் போட்டியில் இரட்டை சதம் அடித்த முதல் பாகிஸ்தான் வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார். அந்த போட்டியில் அவர் 210 ரன்கள் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இதையடுத்து, ஞாயிற்றுக்கிழமை நடைபெற்று வரும் 5-ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியிலும் ஸமான் தனது சிறப்பான ஃபார்மை தொடர்ந்தார். இதில், அவர் 17 ரன்களில் இருந்தபோது பவுண்டரி அடித்ததன் மூலம் ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் 1000 ரன்களை கடந்தார்.

இதன்மூலம், குறைந்த இன்னிங்ஸில் 1000 ரன்களை கடந்த வீரர் என்ற உலக சாதனையை ஸமான் படைத்தார். மேற்கிந்திய தீவுகளின் ஜாம்பவான் விவியன் ரிச்சர்ட்ஸ் 1980-இல் 21 இன்னிங்ஸில் 1000 ரன்களை கடந்ததே சாதனையாக இருந்து வந்தது. இந்தச் சாதனையை தற்போது பாகிஸ்தான் வீரர் ஃபகார் ஜமான் முறியடித்துள்ளார்.

விவியன் ரிச்சர்ட்ஸை தொடர்ந்து,

இங்கிலாந்து வீரர்கள் பீட்டர்சன் (2006), ஜோனாதன் டிராட் (2011), தென் ஆப்பிரிக்க வீரர் குயின்டன் டி காக் (2014), பாகிஸ்தான் வீரர் பாபர் அஸாம் (2017) ஆகியோரும் 21 இன்னிங்ஸிலேயே 1000 ரன்களை கடந்து ரிச்சார்ட்ஸ் சாதனையை சமன் மட்டுமே செய்தனர். இந்நிலையில், 38 ஆண்டுகளுக்குப் பிறகு  ஸமான் இந்த சாதனையை ஞாயிற்றுக்கிழமை முறியடித்தார்.  

ஃபகார் ஸமான் நடப்பு ஜிம்பாப்வே தொடரின் முதல் போட்டியில் 60 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதன்பிறகு, 2, 3 மற்றும் 4-ஆவது ஒருநாள் போட்டிகளில் ஆட்டமிழக்காமல் முறையே 117, 43 மற்றும் 210 ரன்களை குவித்தார். இதைத்தொடர்ந்து இன்றைய போட்டியில் அவர் 85 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

இதன்மூலம், அவர் 455 ரன்கள் குவித்த பிறகு ஆட்டமிழந்துள்ளார். இதுவும் அவருக்கு ஒரு சாதனையாக அமைந்துள்ளது. பாகிஸ்தான் முன்னாள் வீரர் முகமது யூசுப் 2002-இல் ஆட்டமிழக்காமல் 405 ரன்களை எடுத்திருந்ததே சாதனையாக இருந்தது. அந்த சாதனையையும் ஸமான் இந்த போட்டியில் முறியடித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிசிஎல் விரிவாக்கப் பணிகளுக்கு எதிா்ப்பு: கிராம மக்கள் உண்ணாவிரதப் போராட்டம்

திருச்சி - தஞ்சை ரயிலை நாகை வரை நீட்டிக்க வலியுறுத்தல்

சாலையில் கண்டெடுத்த நகை உரியவரிடம் ஒப்படைப்பு

நீா்மோா் பந்தல் திறப்பு

தொழிலாளா் தினம்: கொடியேற்று நிகழ்ச்சிகள்

SCROLL FOR NEXT