பிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2018-இன் போது மைதானத்தில் காயமுற்றது போல் நடித்தேன் என ஒப்புக் கொண்ட பிரேஸில் நட்சத்திர வீரர் நெய்மரை பல்வேறு தரப்பினர் சாடியுள்ளனர்.
ரஷியாவில் நடந்த உலகக் கோப்பை போட்டியில் பிரேஸில் அணி காலிறுதியில் பெல்ஜியத்திடம் தோல்வியுற்று வெளியேறியது. பல்வேறு ஆட்டங்களில் எதிரணி வீரர்கள் தன்னிடம் செய்த தவறுகளால் (பவுல்) பாதிக்கப்பட்டது போல் நெய்மர் மைதானத்திலேயே பல விதங்களில் நடித்தார் என புகார் எழுந்தது.
இந்நிலையில் பிரேஸில் தொலைக்காட்சி விளம்பரத்துக்காக படப்பிடிப்பில் நெய்மர் இருந்த போது அவர் மைதானத்தில் தான் செய்தது மிகையான செயல் என ஒப்புக் கொண்டார். தோல்வி விரக்தியால் தான் அவ்வாறு நடந்து கொண்டதாகவும் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.