முகப்பு
செய்திகள்

ஆசியக் கோப்பை: இறுதிப் போட்டிக்கு இந்திய மகளிர் அணி தகுதி!

ஆசியக் கோப்பை மகளிர் டி 20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானைத் தோற்கடித்து இறுதிச்சுற்றுக்குத் தேர்வாகியுள்ளது.

செய்திகள்

ஆசியக் கோப்பை: இறுதிப் போட்டிக்கு இந்திய மகளிர் அணி தகுதி!

ஆசியக் கோப்பை மகளிர் டி 20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானைத் தோற்கடித்து இறுதிச்சுற்றுக்குத் தேர்வாகியுள்ளது.

Updated On : 30 ஜனவரி, 2024 at 1:16 PM
பகிர்:

ஆசியக் கோப்பை மகளிர் டி 20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானைத் தோற்கடித்து இறுதிச்சுற்றுக்குத் தேர்வாகியுள்ளது.

கோலாலம்பூரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது.

இந்திய மகளிர் அணி சிறப்பாகப் பந்துவீசியதால் பாகிஸ்தான் அணியால் 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 72 ரன்கள் மட்டுமே எடுக்கமுடிந்தது. ஏக்தா பிஸ்ட் 14 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். பாகிஸ்தான் வீராங்கனைகளில் சனா மிர் 20, நகிதா கான் 18 ரன்கள் எடுத்தனர். மற்ற வீராங்கனைகள் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தார்கள். 

இந்த எளிதான இலக்கை 16.1 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 75 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது இந்திய அணி. மந்தனா 38 ரன்கள் எடுத்தார். கெளர் 34 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதையடுத்து ஞாயிறன்று நடைபெறவுள்ள இறுதிச்சுற்றுக்கு ஆட்டத்துக்கு இந்திய அணி தகுதி பெற்றுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →