செய்திகள்

ரவீந்திர ஜடேஜா ஒரு 'சிறுத்தை': சுனில் கவாஸ்கர் புகழாரம்

இந்தியாவின் நட்சத்திர ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவை சிறுத்தை என முன்னாள் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் புகழாரம் சூட்டியுள்ளார்.

Raghavendran

இந்தியா, ஆப்கானிஸ்தான் இடையிலான வரலாற்றுச் சிறப்புமிக்க டெஸ்ட் போட்டி பெங்களூருவில் வியாழக்கிழமை தொடங்கியது. சர்வதேச கிரிக்கெட் அரங்கில் ஆப்கானிஸ்தான் தனது முதல் டெஸ்ட் போட்டியில் களமிறங்கியது.

இந்நிலையில், இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 262 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. மேலும் இரண்டே நாட்களில் இந்தப் போட்டியும் நிறைவடைந்தது. அதிலும் குறிப்பாக 2-ஆம் நாள் ஆட்டத்திலேயே ஆப்கானிஸ்தான் அணி இரு இன்னிங்ஸ்களிலும் ஆட்டமிழந்துள்ளது.

இதனிடையே, வெள்ளிக்கிழமை நடந்த 2-ஆம் நாள் ஆட்டத்தின் போது, இந்தியாவின் நட்சத்திர ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவை சிறுத்தை என முன்னாள் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் புகழாரம் சூட்டியுள்ளார்.

எப்போதும் தனது மின்னல் வேக ஃபீல்டிங்கிற்கு புகழ்பெற்ற ஜடேஜா, இந்தப் போட்டியிலும் களத்தில் செயல்பட்ட விதத்தை பாராட்டும் விதமாக வர்ணனை செய்துகொண்டிருந்த கவாஸ்கர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமெரிக்க வரி விதிப்பால் ஆட்டோமொபைல் உதிரிபாக உற்பத்தி 8% பாதிப்பு!

பில் சால்ட் அதிரடி: டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய இங்கிலாந்து!

அன்பே வலிமையின் ஆதாரம்: வாழ்த்துகளுக்கு நன்றி கூறிய பிரதமர்!

சத்தீஸ்கரில் 12 மாவோயிஸ்டுகள் சரண்!

102 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸி.யை வீழ்த்தி இந்தியா அபாரம்; சமனில் ஒருநாள் தொடர்!

SCROLL FOR NEXT