செய்திகள்

இந்தியாவில் மல்யுத்த சிறப்பு பயிற்சி மையம்

DIN

இந்தியாவில் உலக மல்யுத்த சிறப்பு மையம் அமைக்கப்படும் வாய்ப்புள்ளதாக உலக மல்யுத்த சம்மேளனம் பொழுதுபோக்கு பிரிவு துணைத் தலைவர் பால் டிரிப்பிள் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் புதன்கிழமை கூறியதாவது-
உலக மல்யுத்த பொழுதுபோக்கு பிரிவில் இந்தியா சிறந்த வாய்ப்புள்ள இடமாக திகழ்கிறது. கடந்த சில ஆண்டுகளாக அதிகளவு வீரர்கள் உருவாகி உள்ளனர். 
தொழில்முறை மல்யுத்தப் போட்டிக்கு இந்தியாவில் அதிக திறமையான வீரர்கள் உள்ளனர். 
எனவே வருங்காலத்தில் இந்திய வீரர்கள் பயன்பெறும் வகையில் மல்யுத்த சிறப்பு மையம் அமைக்கப்படும். குறைந்தளவு வீரர்கள் இருந்தால் அவர்களுக்கு ஆர்லாண்டோவில் உள்ள பயிற்சி மையத்தில் பயிற்சி அளிக்கப்படும். 
ஆனால் அதிக வீரர்கள் உள்ளதால் சிறப்பு மையத்தை இங்கேயே அமைக்கும் வாய்ப்புள்ளது. தொழில்முறை மல்யுத்த போட்டிகளுக்கு இந்தியாவில் சிறப்பான எதிர்காலம் உள்ளது. 
உலக மல்யுத்த சம்மேளனம் அதிகளவில் இந்திய வீரர்களை தேர்வு செய்தால் மேலும் வளர்ச்சி அதிகமாகும். கவிதா தேவி, கிஷான் ரப்தார் போன்றவர்கள் உருவாகி உள்ளனர் என்றார் பால்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லியில் கேட்பாரற்றுக் கிடந்த பையால் பரபரப்பு

பாஜகவின் பொய்யான வாக்குறுதிகளால் சலிப்படைந்த மக்கள்: கெலாட்

இளம்பருவத்தினர் இணையவழி குற்றங்களில் ஈடுபடாமல் தடுக்க சர்வதேச ஒத்துழைப்பு தேவை -தலைமை நீதிபதி

'ஜெயக்குமார் தனசிங் காலமான செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன்'

அரண்மனை - 4 முதல்நாள் வசூல்!

SCROLL FOR NEXT