செய்திகள்

மகளிர் தினத்துக்குத் தமிழில் வாழ்த்து சொன்ன ஹர்பஜன் சிங்!

எழில்

சென்னை சூப்பர் கிங்ஸ் ஐபிஎல் அணிக்குத் தேர்வாகியுள்ள கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், மகளிர் தினத்தையொட்டி தமிழில் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் ட்வீட் செய்ததாவது:

அன்னையும் அவளே, சகோதரியும் அவளே, தோழியும் அவளே, மனைவியும் அவளே, மகளும் அவளே, உலகில் உள்ள அணைத்து உறவுகளின் அடிப்படையும் அவளே. பெண்ணாகப் பிறவி எடுத்த அனைவருக்கும் அன்பு சகோதரனின் மகளிர் தின நல்வாழ்த்துக்கள். பெண்மையை போற்றுவோம்.. என்று கூறியுள்ளார்.

சமீபத்தில் நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஹர்பஜன் சிங்கை ரூ. 2 கோடிக்குத் தேர்வு செய்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீன நெடுஞ்சாலை உடைப்பு: துரிதமாக செயல்பட்ட டிரக் ஓட்டுநருக்கு பாராட்டு

இந்தியன் - 2 வெளியீட்டில் மாற்றம்?

நிஜ்ஜார் கொலையில் மூவர் கைது: பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உடன் தொடர்பு?

”மன்னாதி மன்னன் போல வாழ்க்கை” -பிரதமர் மோடியை விமர்சித்த பிரியங்கா காந்தி

பல கேள்விகளுக்கு பதில் கூற நேரமெடுக்கும்: ஹார்திக் பாண்டியா

SCROLL FOR NEXT