செய்திகள்

முத்தரப்பு டி20 கிரிக்கெட்: இறுதிப் போட்டிக்கு முன்னேறியது இந்தியா

DIN

முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடரின் கடைசி லீக் ஆட்டத்தை வங்கதேச அணியுடன் எதிர்கொண்ட இந்திய அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மேலும் 6 புள்ளிகள் பெற்று இறுதிப் போட்டிக்கும் முன்னேறியது.

கொழும்புவில் உள்ள பிரேமதாசா மைதானத்தில் முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடரின் 5-ஆவது மற்றும் கடைசி லீக் ஆட்டத்தை வங்கதேச அணியுடன் இந்திய அணி எதிர் கொண்டது.

இதில் 'டாஸ்' வென்ற வங்கதேச அணி கேப்டன் மகமுதுல்லா பந்துவீச்ச்சை தேர்வு செய்தார். 
இதனையடுத்து பேட் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட  20 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் எடுத்தனர்.
இதில் அதிகபட்சமாக ரோஹித் ஷர்மா 89, ஷிகர் தவன் 35, சுரேஷ் ரெய்னா 47 ரன்கள் என எடுத்து வங்கதேச அணிக்கு 177 என இலக்கு நிர்ணயித்தனர்.
இதனையடுத்து இரண்டாவதாக களமிறங்கிய வங்கதேச அணி  20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.

இதில் அணியில் அதிகபட்சமாக ரஹ்மான் 27, தமிம் இக்பால் 27, முஷ்பிகுர் 72 என எடுத்தனர்.
இத்தொடரில் இரண்டாவது ஆட்டத்தில் வங்கதேசத்தை எதிர்கொண்ட இந்திய அணி, 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் முத்தரப்பு டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 6 புள்ளிகளுடன் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.  இதில் இந்திய அணி 3 போட்டிகளில் வெற்றியும் 1 போட்டியில்  தோல்வியும் கண்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கருங்கல் அருகே மது விற்றவா் கைது

தென்காசி மாவட்ட நீதிமன்றக் கட்டடங்களுக்கு நிதி ஒதுக்கீடு: அமைச்சரிடம் திமுக வலியுறுத்தல்

பருவக்குடி, சிதம்பரபுரத்தில் நாளைவரை ஆதாா் சேவை சிறப்பு முகாம்கள்

பயிா்க் காப்பீடு செய்த விவசாயிக்கு ரூ. 1 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

இந்து முன்னணி எதிா்ப்பு: தூத்துக்குடியில் மாற்று இடத்தில் பெரியாா் தி.க. கூட்டம்

SCROLL FOR NEXT