செய்திகள்

ரோஹித் 89, வங்கதேசத்துக்கு 177 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயம்

Raghavendran

முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடரின் 5-ஆவது ஆட்டம் மற்றும் தனது கடைசி லீக் ஆட்டத்தில் வங்கதேச அணியை இந்தியா புதன்கிழமை எதிர்கொள்கிறது.

முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடரின் கடந்த 6-ஆம் தேதி நடைபெற்ற முதல் ஆட்டத்தில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலங்கையிடம் இந்திய அணி வீழ்ந்தது. 2-ஆவது ஆட்டத்தில் வங்கதேசத்தை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. 

இந்நிலையில், இந்தியாவுடனான ஆட்டத்தில் தோல்வியுடன் தொடங்கிய வங்கதேசம், பதிலடி கொடுக்கும் வகையில் இந்த ஆட்டத்தில் விளையாடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

கொழும்பு நகரில் உள்ள பிரேமதாசா மைதானத்தில் நடைபெறும் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற வங்கதேச கேப்டன் முகமதுல்லா பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் எடுத்துள்ளது.

அதிகபட்சமாக கேப்டன் ரோஹித் ஷர்மா, 5 பவுண்டரி, 5 சிக்ஸர்களுடன் 89 ரன்கள் குவித்தார். சுரேஷ் ரெய்னா, 5 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்களுடன் 47 ரன்கள் விளாசினார். ஷிகர் தவன் 35 ரன்கள் சேர்த்தார்.

வங்கதேச தரப்பில் ரூபெல் ஹுசைன் 2 விக்கெட்டுகளைச் சாய்த்தார். இதையடுத்து அந்த அணி 177 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கியுள்ளது. இப்போட்டியில் வெற்றிபெற்றால் இந்தியா இறுதிப்போட்டிக்கு முன்னேறும் முதல் அணி என்ற சிறப்பை பெறும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐரோப்பாவின் சாதனைப் பெண்மணி தெரேசா விசெண்டேவுக்கு ’பசுமை நோபல்’ விருது

செம்பூவே... ஐஸ்வர்யா ராஜேஷ்!

அறிவியல் ஆயிரம்: நெருப்பு ஊர்வலங்கள்... சூரிய தோரணங்கள்

அர்ஜுன் தாஸின் ரசவாதி டிரைலர்!

ஐபிஎல் தொடரில் அதிவேக சதங்கள் அடித்த வீரர்கள்!

SCROLL FOR NEXT