முகப்பு
செய்திகள்

இரானி கோப்பை: இரட்டைச் சதமெடுத்த 40 வயது வாசிம் ஜாஃபர்!

175 ரன்களைக் கடந்தபோது முதல்தர கிரிக்கெட்டில் 18 ஆயிரம் ரன்களைப் பூர்த்தி செய்தார் ஜாஃபர்...

செய்திகள்

இரானி கோப்பை: இரட்டைச் சதமெடுத்த 40 வயது வாசிம் ஜாஃபர்!

175 ரன்களைக் கடந்தபோது முதல்தர கிரிக்கெட்டில் 18 ஆயிரம் ரன்களைப் பூர்த்தி செய்தார் ஜாஃபர்...

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:29 PM
பகிர்:

விதர்பா - ரெஸ்ட் ஆஃப் இந்தியா ஆகிய அணிகளுக்கிடையிலான இரானி கோப்பை போட்டி நாகபுரியில் நேற்று தொடங்கியது.

டாஸ் வென்ற விதர்பா அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. கருண் நாயர் தலைமையிலான ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணியில் மயங்க் அகர்வால், பிருத்வி ஷா, அஸ்வின் போன்றோர் இடம்பெற்றுள்ளார்கள்.

முதல்நாள் முடிவில் விதர்பா அணி 90 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 289 ரன்கள் குவித்துள்ளது. ஜாஃபர் 113, கணேஷ் சதீஷ் 29 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள். ரெஸ்ட் ஆஃப் இந்தியா தரப்பில் அஸ்வினும் ஜெயந்த் யாதவும் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினார்கள்.

இந்நிலையில் வாசிம் ஜாஃபரும் கணேஷ் சதீஷும் இன்றும் சிறப்பாக விளையாடி ரெஸ்ட் ஆஃப் இந்தியா பந்துவீச்சாளர்களுக்கு நெருக்கடியை அளித்தார்கள். 123-வது ஓவரின் அணியின் ஸ்கோர் 400-ஐ தொட்டது. 175 ரன்களைக் கடந்தபோது முதல்தர கிரிக்கெட்டில் 18 ஆயிரம் ரன்களைப் பூர்த்தி செய்தார் ஜாஃபர். இதன்பின்னர் 314 பந்துகளில் இரட்டைச் சதத்தைப் பூர்த்தி செய்தார் ஜாஃபர். அடுத்ததாக சதீஷ் 321 பந்துகளில் சதமடித்தார். இது வாசிம் ஜாஃபரின் 8-வது இரட்டைச் சதம். 

விதர்பா அணி 150 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 485 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. வாசிம் ஜாஃபர் 223, கணேஷ் சதீஷ் 114 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள்.

முழு கட்டுரையைப் படிக்க →