சிட்னியில் நடைபெறும் துப்பாக்கிச் சுடுதல் ஜூனியர் உலகக் கோப்பைப் போட்டியில் தமிழ்ப் பெண் இளவேனில் உலக சாதனையுடன் தங்கம் வென்றுள்ளார்.
குஜராத்தில் வசிக்கும் 18 வயது தமிழ்ப் பெண்ணான இளவேனில், 10 மீ. ஏர் ரைஃபிள் போட்டியில் 249.8 புள்ளிகள் பெற்று தங்கம் வென்றார். தகுதிச்சுற்றின் முடிவில் 631.4 புள்ளிகள் பெற்று ஜூனியர் உலக சாதனையையும் படைத்துள்ளார். சர்வதேச அளவில் அவர் பங்குபெறும் இரண்டாவது போட்டி இது. கடந்த வருடம் ஜெர்மனியில் நடைபெற்ற ஜூனியர் உலகக் கோப்பை போட்டியில் 28-வதாக வந்த இளவேனில், இந்தமுறை தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இப்போட்டியில் பங்கேற்ற இதர இரு இந்திய வீராங்கனைகள் ஆறாவது மற்றும் ஏழாவது இடங்களைப் பிடித்துள்ளார்.
மேலும் அணிகளுக்கிடையிலான போட்டியிலும் இந்தியாவின் இளவேனில், ஸ்ரேயா, ஜீனா ஆகிய மூவரும் இணைந்து தங்கம் வென்றுள்ளார்கள்.
இளவேனிலின் இச்சாதனைக்கு பிரபல துப்பாக்கிச் சுடுதல் வீரர்கள் பாராட்டு தெரிவித்துள்ளார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.