செய்திகள்

அதிக டெஸ்ட் சதங்கள் எடுத்த நியூஸிலாந்து வீரர்: கேன் வில்லியம்சன் சாதனை!

எழில்

நியூஸிலாந்துக்கு எதிரான முதல் பகலிரவு டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து தனது முதல் இன்னிங்ஸில் 20.4 ஓவர்களில் 58 ரன்களுக்கு சுருண்டது. நியூஸிலாந்தின் டிரென்ட் போல்ட், டிம் செளதி ஆகிய இரண்டே பேர் இங்கிலாந்தின் ஒட்டுமொத்த விக்கெட்டுகளையும் சரித்தனர். இதையடுத்து தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய நியூஸிலாந்து முதல்நாள் முடிவில் 69 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் எடுத்தது. கேப்டன் கேன் வில்லியம்சன் 91, ஹென்ரி நிகோலஸ் 24 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள்.

இந்நிலையில் கேன் வில்லியம்சன் தனது சதத்தை இன்று பூர்த்தி செய்தார். பிறகு அவர் 102 ரன்களில் ஆட்டமிழந்துள்ளார். இது அவருடைய 18-வது டெஸ்ட் சதமாகும். 

இதன்மூலம் அதிக டெஸ்ட் சதங்கள் எடுத்த நியூஸிலாந்து வீரர் என்கிற பெருமையைப் பெற்றுள்ளார். ராஸ் டெய்லர், மார்டின் குரோவ் ஆகிய இருவரும் 17 டெஸ்ட் சதங்கள் எடுத்துள்ளார்கள். அதைத் தாண்டியுள்ளார் கேன் வில்லியம்சன். 

ஒவ்வொரு நாட்டுக்காகவும் அதிக சதங்கள் எடுத்த வீரர்கள்

இந்தியா - சச்சின் டெண்டுல்கர் - 51 சதங்கள்
தென் ஆப்பிரிக்கா - ஜாக் காலிஸ் - 45 சதங்கள்
ஆஸ்திரேலியா - ரிக்கி பாண்டிங் - 41 சதங்கள்
இலங்கை - சங்கக்காரா - 38 சதங்கள்
மேற்கிந்தியத் தீவுகள் - லாரா - 34 சதங்கள்
பாகிஸ்தான் - யூனிஸ் கான் - 34 சதங்கள்
இங்கிலாந்து - குக் - 32 சதங்கள்
நியூஸிலாந்து - கேன் வில்லியம்சன் - 18 சதங்கள்
ஜிம்பாப்வே - ஆண்டி பிளவர் - 12 சதங்கள்
வங்கதேசம்:தமிம் இக்பால் - 8 சதங்கள்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விஜயுடன் கூட்டணிக்கு காத்திருக்கிறேன்: சீமான்

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

மேற்கு வங்க ஆளுநா் மீதான பாலியல் குற்றச்சாட்டு: ஊழியா்கள் மூவா் மீது வழக்குப் பதிவு

SCROLL FOR NEXT