செய்திகள்

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்; வில்யம்சன் சதம்: நியூஸிலாந்து பலம்

தினமணி

இங்கிலாந்துக்கு எதிரான முதல் பகலிரவு டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நியூஸிலாந்து தனது முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட் இழப்புக்கு 229 ரன்கள் எடுத்து ஆடி வருகிறது. அந்த அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் சதமடித்து அணியை பலப்படுத்தினார்.
 ஆக்லாந்தில் நடைபெறும் இந்தப் போட்டியில் நியூஸிலாந்து டாஸ் வென்று பந்துவீச, இங்கிலாந்து முதலில் பேட் செய்தது. 20.4 ஓவர்களில் 58 ரன்களுக்கு வீழ்ந்தது அந்த அணி. கிரெய்க் ஓவர்டன் மட்டும் அதிகபட்சமாக 5 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் உள்பட 33 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
 எஞ்சிய விக்கெட்டுகள் மிகச் சொற்ப ரன்களில் வீழ்ந்தன. 5 பேர் டக் அவுட்டாகினர். நியூஸிலாந்து தரப்பில் டிரென்ட் போல்ட் 6, டிம் செளதி 4 விக்கெட்டுகள் சாய்த்தனர்.
 இதையடுத்து தனது முதல் இன்னிங்ûஸ தொடங்கிய நியூஸிலாந்து முதல் நாள் முடிவில் 69 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் எடுத்திருந்தது. ஜீத் ராவல் 3, டாம் லதாம் 26, ராஸ் டெய்லர் 20 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். கேப்டன் கேன் வில்லியம்சன், ஹென்ரி நிகோலஸ் ஆகியோர் களத்தில் இருந்தனர்.
 இந்நிலையில், 2-ஆம் நாளான வெள்ளிக்கிழமை ஆட்டத்தை வில்லியம்சன் 91, நிகோலஸ் 24 ரன்களுடன் தொடங்கினர். இதில் சதம் கடந்த வில்லியம்சன் 220 பந்துகளில் 11 பவுண்டரிகள், 3 சிக்ஸர்களுடன் 102 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இந்நிலையில் மழை காரணமாக ஆட்டம் சுமார் ஒரு மணி நேரம் தடைப்பட்டது.
 அதையடுத்து தேநீர் இடைவேளை விடப்பட்டு பின்னர் தொடங்கிய ஆட்டத்தில் வாட்லிங் களம் கண்டார். எனினும், சிறிது நேரத்திலேயே மீண்டும் கனமழை பெய்ததை அடுத்து 2-ஆம் நாள் ஆட்டம் அத்துடன் முடித்துக் கொள்ளப்பட்டது. நியூஸிலாந்து 92.1 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 229 ரன்கள் எடுத்திருந்தது.
 நிகோலஸ் 49, வாட்லிங் 17 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இங்கிலாந்து தரப்பில் ஜேம்ஸ் ஆன்டர்சன் ஒரு விக்கெட் வீழ்த்தியிருந்தார். தற்போதைய நிலையில் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்தை விட நியூஸிலாந்து 171 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. அணியின் வசம் 6 விக்கெட்டுகள் உள்ளன.
 சாதனைச் சதம்
 2-ஆம் நாள் ஆட்டத்தில் நியூஸிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் அடித்த சதம், டெஸ்ட் போட்டியில்
 அவரது 18-ஆவது சதமாகும். முன்னதாக டெஸ்ட் போட்டியில் அதிக சதம் அடித்த நியூஸிலாந்து வீரர்கள்
 வரிசையில் மறைந்த வீரர் மார்டின் குரோவ், ராஸ் டெய்லர், கேன் வில்லியம்சன் ஆகியோர் 17 சதத்துடன் சமநிலையில் இருந்தனர். தற்போது வில்லியம்சன் தனது 18-ஆவது சதத்தை எட்டி புதிய சாதனை படைத்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி வெற்றி பெறுவது உறுதி கே.எம். காதா் மொகிதீன்

கடற்கரையில் தூய்மைப் பணி

செங்கோட்டையில் திருவிளக்கு பூஜை

சங்கரன்கோவிலில் திமுக சாா்பில் நீா்மோா் வாகனம்

சங்கரன்கோவிலில் வணிகா் தின பேரணி

SCROLL FOR NEXT