செய்திகள்

மகளிர் முத்தரப்பு டி20: இங்கிலாந்து வெற்றி

தினமணி

மகளிர் முத்தரப்பு டி20 கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் இங்கிலாந்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. இத்தொடரின் முதல் ஆட்டத்தில் இந்தியாவை வீழ்த்தியிருந்த ஆஸ்திரேலியா, தனது 2-ஆவது ஆட்டத்தில் தோல்வி கண்டுள்ளது.
 இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மகளிர் அணிகள் பங்கேற்றுள்ள முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர் மும்பையில் நடைபெற்று வருகிறது. இதன் 2-ஆவது ஆட்டத்தில் இங்கிலாந்து-ஆஸ்திரேலிய அணிகள் வெள்ளிக்கிழமை மோதின.
 இதில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 149 ரன்கள் அடித்தது. அடுத்து ஆடிய இங்கிலாந்து 17 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 150 ரன்கள் எடுத்து வென்றது.
 முன்னதாக, டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச தீர்மானிக்க, பேட் செய்த ஆஸ்திரேலியாவில் கேப்டன் ரேச்சல் ஹெய்ன்ஸ் மட்டும் அதிகபட்சமாக 8 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் உள்பட 65 ரன்கள் எடுத்தார். அலிசா ஹீலி 31, கார்டனர் 28 ரன்கள் சேர்க்க, எஞ்சிய விக்கெட்டுகள் ஒற்றை இலக்க ரன்னில் வீழ்ந்தன. கேரி, ஜோனசன் தலா ஒரு ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இங்கிலாந்து தரப்பில் ஜென்னி 3, ஸ்கீவர் 2, டேனியல் ஹேசல் 1 விக்கெட் எடுத்தனர்.
 பின்னர் 150 ரன்களை இலக்காகக் கொண்டு ஆடிய இங்கிலாந்தில் டேனியல் வியாட் 18, பிரையோனி ஸ்மித் 1 ரன்னுடன் நடையைக் கட்டினர். டேமி பியுமன்ட் 58, நடாலி ஸ்கீவர் (10 பவுண்டரிகள், 2 சிக்ஸர்) 68 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிக்கு வழிநடத்தினர். ஆஸ்திரேலிய தரப்பில் மீகன் ஷட், கிம்மின்ஸ் தலா ஒரு விக்கெட் சாய்த்தனர். நடாலி ஸ்கீவர் ஆட்டநாயகியாக அறிவிக்கப்பட்டார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேகமலை அருவிக்கு செல்லத் தடை

காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

இன்று யோகம் யாருக்கு?

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT