செய்திகள்

இந்திய ஆடவர் ஹாக்கி அணியின் பயிற்சியாளர் மாற்றம்! பழைய பொறுப்புக்கே சென்றார் மாரிஜ்னே!

இந்திய ஆடவர் ஹாக்கி அணியின் தலைமைப் பயிற்சியாளராக ஹரேந்திர சிங் நியமிக்கப்பட்டுள்ளார்...

எழில்

இந்திய ஆடவர் ஹாக்கி அணியின் தலைமைப் பயிற்சியாளராக ஹரேந்திர சிங் நியமிக்கப்பட்டுள்ளார். இத்தகவலை ஹாக்கி இந்தியா அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. 

அண்மையில் நடந்த காமன்வெல்த் போட்டியில், பதக்கம் எதுவும் வெல்லாமல் 4-வது இடத்தையே இந்திய ஆடவர் அணி பெற்றிருந்தது. அதற்கு முன்பு, சுல்தான் அஸ்லான் ஷா கோப்பை ஹாக்கி போட்டியில், 5-வது இடத்தைப் பிடித்தது. 

இதனால் இந்திய ஹாக்கி அணி மீது விமரிசனங்கள் எழுந்துள்ளன. இந்நிலையில் இந்திய அணியின் பயிற்சியாளர் ஜோர்டு மாரிஜ்னேவை நீக்கியுள்ளது ஹாக்கி இந்தியா. கடந்த செப்டம்பர் மாதம், இந்திய ஹாக்கி அணியின் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து ரோலண்ட் ஓல்ட்மன்ஸை நீக்கம் செய்து ஹாக்கி இந்தியா நடவடிக்கை மேற்கொண்டது. ஓல்ட்மன்ஸுக்குப் பதிலாகத் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்புக்கு வந்த மாரிஜ்னேவையும் தற்போதும் ஹாக்கி இந்தியா நீக்கியுள்ளது. 

இந்நிலையில் இந்திய ஹாக்கி அணியின் புதிய பயிற்சியாளராக ஹரேந்திர சிங் நியமிக்கப்பட்டுள்ளார். இவர், இதற்கு முன்பு இந்திய மகளிர் அணியின் தலைமைப் பயிற்சியாளராக இருந்தார். அப்பொறுப்பு, ஜோர்டு மாரிஜ்னேவுக்குத் தற்போது வழங்கப்பட்டுள்ளது. ஹரேந்திர சிங்குக்கு முன்பு மகளிர் அணியின் தலைமைப் பயிற்சியாளராக இருந்தவர், மாரிஜ்னே.

ஹாக்கி இந்தியாவின் இந்த முடிவுகளுக்கு ஹரேந்திர சிங், மாரிஜ்னே ஆகிய இருவரும் சம்மதம் தெரிவித்துள்ளார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காந்தப் பார்வை... ஸ்ருஷ்டி பன்னாட்டி!

டிஎஸ்பி சிராஜ்..! வெளிநாட்டில் 100 விக்கெட்டுகள்!

3 தேசிய விருதுகள்! பார்க்கிங் படக்குழுவை வாழ்த்திய கமல் ஹாசன்!

நிறைவடையும் தங்க மகள்... மகளே என் மருமகளே தொடரின் ஒளிபரப்பு அறிவிப்பு!

புரியில் 15 வயது சிறுமி மரண வழக்கில் திடீர் திருப்பம்! போலீஸ் விளக்கம்!

SCROLL FOR NEXT