செய்திகள்

இரட்டை சதம் அடித்து ரஹீம் சாதனை: வலுவான நிலையில் வங்கதேசம்

DIN

ஜிம்பாப்வே அணியுடனான 2-ஆவது டெஸ்ட் போட்டியின் 2-ஆவது நாள் ஆட்ட நேர முடிவில் ஜிம்பாப்வே அணி 25 ரன்களுக்கு 1 விக்கெட்டை இழந்து 497 ரன்கள் பின்தங்கியுள்ளது. 

வங்கதேசம், ஜிம்பாப்வே அணிகளுக்கிடையிலான 2-ஆவது டெஸ்ட் போட்டி நேற்று (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கியது. டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. 
முதல் நாள் ஆட்டநேர முடிவில் வங்கதேச அணி 5 விக்கெட்டுகளை இழந்து 303 ரன்கள் எடுத்திருந்தது. ரஹீம் 111 ரன்களிலும், மஹமதுல்லா ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். 

இதைத்தொடர்ந்து, இருவரும் 2-ஆம் நாள் ஆட்டத்தை தொடர்ந்தனர். முதல் நாளில் 111 ரன்கள் குவித்த ரஹீம் தொடர்ந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவருக்கு ஒத்துழைப்பு தந்து விளையாடிய மஹமதுல்லா 36 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து, களமிறங்கிய ஆரிஃபுல் ஹக் 4 ரன்களில் ஆட்டமிழந்தார். 

இந்நிலையில், ரஹீம் உடன் மெஹதி ஹாசன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி பொறுப்புடன் விளையாடி முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை 400 ரன்களுக்கு மேல் கொண்டு சேர்த்தது. 

சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரஹீம் டெஸ்ட் அரங்கில் தனது 2-ஆவது இரட்டை சதத்தை அடித்தார். அவருடன் சிறப்பாக விளையாடி வந்த மெஹதி ஹாசனும் தன் பங்குக்கு அரைசதம் அடித்தார். இதனால், அந்த அணியின் ஸ்கோர் 500-ஐ தாண்டியது. 

இதனால், முதல் இன்னிங்ஸ் ஆட்டத்தை மஹமதுல்லா டிக்ளேர் செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், டெஸ்ட் கிரிக்கெட்டில் வங்கதேச வீரரின் தனிநபர் அதிகபட்ச ஸ்கோரான ஷாகிப் அல் ஹசனில் 217 ரன்கள் என்ற சாதனையை ரஹீம் முறியடிக்கும் வரை அவர் டிக்ளேர் செய்யவில்லை.

இதையடுத்து, ரஹீம் ஷாகிப் அல் ஹசனின் சாதனையை முறியடித்தார். அந்த அணி 7 விக்கெட்டுகளை இழந்து 522 ரன்கள் குவித்தபோது, மஹமதுல்லா முதல் இன்னிங்ஸை டிக்ளேர் செய்தார். இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ரஹீம் மற்றும் மெஹதி ஹாசன் முறையே 219 மற்றும் 68 ரன்கள் குவித்தனர். 

ஜிம்பாப்வே அணி சார்பில் ஜார்விஸ் 5 விக்கெட்டுகளையும், சதாரா மற்றும் டிரிபானோ தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர். 

இதைத்தொடர்ந்து, ஜிம்பாப்வே அணி தனது முதல் இன்னிங்ஸை ஆட்டத்தை தொடர்ந்தது. 2-ஆவது நாள் ஆட்டநேர முடிவில் அந்த அணி 1 விக்கெட்டை இழந்து 25 ரன்கள் எடுத்துள்ளது. தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய கேப்டன் மசகட்சா 14 ரன்களுக்கு தைஜூல் இஸ்லாம் பந்தில் ஆட்டமிழந்தார். அந்த அணி தற்போது 497 ரன்கள் பின்தங்கியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை!

மனதை திருடும் மாயம் என்ன?

ககன்யான் திட்டம்: பாராசூட் சோதனையில் இஸ்ரோ!

முகல் தோட்டத்து மலரோ..!

விண்கல்லால் 6,900 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட பள்ளம்!

SCROLL FOR NEXT