செய்திகள்

ஒரு வருடத்தில் அதிக டி20 விக்கெட்டுகள்: பூம்ராவின் சாதனையைத் தாண்டிய இந்திய வீராங்கனை

எழில்

4 அடி 11 அங்குலம் உயரம் கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் வீராங்கனையும் சுழற்பந்துவீச்சாளருமான பூணம் யாதவ் புதிய சாதனை நிகழ்த்தியுள்ளார்.

2018-ல் டி20 கிரிக்கெட்டில் இதுவரை அவர்  22 இன்னிங்ஸில் 32 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். இதன்மூலம் ஆடவர், மகளிர் என இருவகை டி20 கிரிக்கெட் போட்டிகளிலும் ஒரு வருடத்தில் அதிக விக்கெட்டுகள் எடுத்தவர் என்கிற சாதனை படைத்துள்ளார். 2016-ல் பூம்ராவும் இந்த வருடம் பாகிஸ்தானின் ஷதாப் கானும் 28 விக்கெட்டுகள் எடுத்ததே டி20 சாதனையாக இருந்தது. இதனை 27 வயது பூணம் யாதவ் முறியடித்துள்ளார். 

இந்தளவுக்குச் சாதனை படைத்தாலும் இவர் இந்திய ரசிகர்களிடையே அவ்வளவாகப் பிரபலம் ஆகாதவர். மிதாலி ராஜ், ஸ்மிருதி மந்தனா, ஹர்மன்ப்ரீத் கெளர் ஆகிய இந்திய வீராங்கனைகளை ட்விட்டரில் லட்சக்கணக்கானோர் பின்தொடர்கிறார்கள். ஆனால் பூணம் யாதவை இதுவரை 200 பேர் கூட பின்தொடரவில்லை. இந்தச் சாதனை குறித்த செய்திகள் வெளியானபிறகு அவர் சமூகவலைத்தளங்களில் அதிகம் கவனிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புள்ளிப்பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறுமா ராஜஸ்தான்?

2,5000 பென்டிரைவ் விநியோகம்: பிரஜ்வல் விவகாரத்தில் சித்தராமையா சதிச்செயல் - குமாரசாமி குற்றச்சாட்டு

‘போர் தொழில்’.. நிகிலா விமல்!

சேலை கட்டி வந்த நிலவோ? காவ்யா...

இன்று மூன்றாம் கட்ட வாக்குப் பதிவு நடந்த 93 தொகுதிகள் யார் பக்கம்?

SCROLL FOR NEXT