முகப்பு
செய்திகள்

பல நினைவுகளை மீட்டெடுக்கும் நவம்பர் 15: சச்சின் உருக்கம்

இந்த நாளன்றுதான் பாகிஸ்தானுக்கு எதிரான தனது அறிமுக டெஸ்டை 16 வயதில் விளையாடினார் சச்சின் டெண்டுல்கர்...

Updated On : 30 ஜனவரி, 2024 at 5:37 PM
பகிர்:

நவம்பர் 15.

இந்த நாளன்றுதான் பாகிஸ்தானுக்கு எதிரான தனது அறிமுக டெஸ்டை 16 வயதில் விளையாடினார் சச்சின் டெண்டுல்கர். இதை முன்வைத்து அவர் ட்விட்டரில் எழுதியதாவது:

ஒவ்வொரு வருடமும் இந்த நாள், இந்தியாவுக்காக அறிமுகமான நாள் பல நினைவுகளை மீட்டெடுக்கிறது. நாட்டுக்காக விளையாடியதும் 24 வருடங்கள் இந்திய அணியில் இடம்பெற்றதும் கெளரவமாகக் கருதுகிறேன் எனக் கூறியுள்ளார். 

Advertisement

முதல் டெஸ்ட் ஆட்டத்தில் ஒரு இன்னிங்ஸ் மட்டும் விளையாடிய சச்சின் 15 ரன்கள் எடுத்தார்.

மேலும் இதே தினத்தில்தான் அவர் பேட்ஸ்மேனாக ஆடுகளத்திலிருந்து விடைபெற்றார். தனது கடைசி டெஸ்ட் ஆட்டத்தில், இந்த நாளில்தான் 74 ரன்கள் எடுத்து ஒரு பேட்ஸ்மேனாக ரசிகர்களிடமிருந்து விடைபெற்றார். மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான இந்த டெஸ்ட் ஆட்டம் அடுத்த நாளில் நிறைவுபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments