செய்திகள்

தமிழ் டிவீட்களை தொடங்கினார் ஹர்பஜன் சிங்: கபாலி முதல் சர்கார் வரை ஃபுல் அப்டேட் 

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தக்கவைக்கப்பட்டதை அடுத்து ஹர்பஜன் சிங் தனது டிவிட்டர் பக்கத்தில் தமிழில் டிவீட் செய்துள்ளார். 

DIN

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தக்கவைக்கப்பட்டதை அடுத்து ஹர்பஜன் சிங் தனது டிவிட்டர் பக்கத்தில் தமிழில் டிவீட் செய்துள்ளார். 

2019-ஆம் ஆண்டு ஐபிஎல் சீசனுக்காக, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடந்த சீசனில் இருந்து 3 வீரர்களை மட்டும் விடுவித்து 22 வீரர்களை தக்கவைத்துள்ளது. தக்கவைக்கப்பட்டுள்ள வீரர்களுள் ஹர்பஜன் சிங்கும் இடம்பெற்றுள்ளார். இந்நிலையில், இந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையில், அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் தமிழில் டிவீட் செய்துள்ளார். அந்த பதிவில், 

"தமிழ் நெஞ்சங்களே நான் வந்தா ராஜாவாத்தான் வருவேன். திரும்ப வந்துட்டேன்னு சொல்றேன் @ChennaiIPL. சும்மா நெருப்பா, சிறப்பா ஒவ்வொரு மேட்சும் #தெறிக்கவிடலாமா! வோர்ல்டு மொத்தமும் அரளவுடனும் பிஸ்து. பிசுறு கெளப்பி பெர்ளவுடனும் பல்து. Delighted to be retained for 2019 @ipl @CSKFansOfficial" என்று பதிவிட்டுள்ளார். 

கடந்த ஐபிஎல் தொடரில் அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பெற்றதில் இருந்து சாம்பியன்ஸ் பட்டத்தை வெல்லும் வரை மாஸான தமிழ் சினிமா வசனங்கள் மற்றும் பாடல் வரிகளை டிவீட்களாக பதிவிட்டு சிஎஸ்கே ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

கூத்தாநல்லூரில் ஆடிப்பெருக்கு

கூட்டுறவு முழுநேர பட்டயப் படிப்பில் சேர காலநீட்டிப்பு

பாஜக ஆளும் மாநிலங்களில் பெண்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்!

SCROLL FOR NEXT