செய்திகள்

உலக மகளிர் குத்துச்சண்டை: சோனியா, பிங்கி அபாரம்

DIN


உலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன் போட்டி காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர் இந்திய வீராங்கனைகள் சோனியா லேதர், பிங்கி ஜாங்ரா.புது தில்லியில் நடைபெற்று வரும் இப்போட்டியில் 72 நாடுகளைச் சேர்ந்த 300 வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். வரும் 24-ஆம் தேதி வரை போட்டிகள் நடைபெறும் நிலையில் மூத்த வீராங்கனை மேரி கோம் தலைமையில் 10 பேர் கொண்ட இந்திய அணி பங்கேற்றுள்ளது.
தங்கப் பதக்கங்களை வெல்லும் நோக்கில் மேரி கோம், சரிதா தேவி களமிறங்கியுள்ளனர்.
இந்நிலையில் ஏற்கெனவே தொடக்க சுற்று ஆட்டங்களில் இந்தியாவின் மனிஷாமெளன், சரிதாதேவி ஆகியோர் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளனர். 

இந்திய வீராங்கனைகள் ஆதிக்கம் 
இதன் தொடர்ச்சியாக சனிக்கிழமை நடைபெற்ற 57 கிலோ பிரிவு ஆட்டம் ஒன்றில் சோனியா லேதர் 5-0 என்ற புளளிக்கணக்கில் மொராக்கோவின் அதிரடி வீராங்கனை டெளஜனி டோவை வென்று காலிறுதிக்கு முந்தை சுற்றுக்கு முன்னேறினார்.


மற்றொரு ஆட்டத்தில் பிங்கி ராணி ஜாங்ரா (51 கிலோ) 4-1 என்ற புள்ளிக்கணக்கில் ஆர்மீனிய வீராங்கனை அனுஷ் கிரிகோர்யனை வீழ்த்தி நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறினார்.
சிம்ரஞ்சித்கெளர் வெற்றி இந்திய வீராங்கனை சிம்ரஞ்சித் கெளர் 64 கிலோ பிரிவில் 4-1 என்ற புள்ளிக்கணக்கில் அமெரிக்கவீராங்கனையை வீழ்த்தி நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஏற்காட்டில் பேருந்து விபத்து : 4 பேர் பலி

கண்ணெதிரே 3 ஐசிசி கோப்பைகள்; பாகிஸ்தான் பயிற்சியாளர் கேரி கிறிஸ்டனின் இலக்கு என்ன?

சின்ன சின்ன பார்வை..!

போஜ்புரி போகன்வில்லா..!

லக்னௌ பந்துவீச்சு; அணியில் டி காக் இல்லை!

SCROLL FOR NEXT