இந்திய அணியின் பயிற்சி ஆட்டம்: மழையால் முதல் நாள் ஆட்டம் ரத்து!
கிரிக்கெட் ஆஸ்திரேலியா லெவன் அணிக்கு எதிரான ஆட்டத்தின் முதல் நாள் மழையால் கைவிடப்பட்டுள்ளது...
இந்தியா-கிரிக்கெட் ஆஸ்திரேலியா லெவன் அணிகள் மோதும் பயிற்சி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று தொடங்கியுள்ளது.
எனினும் கிரிக்கெட் ஆஸ்திரேலியா லெவன் அணிக்கு எதிரான ஆட்டத்தின் முதல் நாள் மழையால் கைவிடப்பட்டுள்ளது. இதனால் இந்திய அணிக்குத் தேவையான பயிற்சிகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. நாளையும் சிட்னியில் மழை பெற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடர் டிசம்பர் 6-ம் தேதி தொடங்குகிறது.