செய்திகள்

பிருத்வி ஷாவை யாருடனும் ஒப்பிடாதீர்கள்: விராட் கோலி வேண்டுகோள்

பிருத்வி ஷா மிகச்சிறந்த திறமையாளர் என்பதில் சந்தேகமில்லை. இதை அனைவரும் ஒப்புக்கொண்டுள்ளனர் என்று இந்திய கேப்டன் விராட் கோலி தெரிவித்தார்.

Raghavendran

இந்தியா சுற்றுப்பயணம் செய்துள்ள மேற்கிந்திய தீவுகள் அணி டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடுகிறது. தற்போது 2 டெஸ்ட் போட்டித் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 272 ரன்கள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றிபெற்றது.

இதையடுத்து இவ்விரு அணிகளும் மோதும் 2-ஆவது டெஸ்ட் ஹைதராபாத் ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் அக்.12 முதல் அக்.16 வரை நடைபெறுகிறது.

இந்நிலையில் வியாழக்கிழமை நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் விராட் கோலி பேசுகையில்,

2-ஆவது டெஸ்ட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி கடும் சவாலை அளிக்கும் என நம்புகிறேன். ஏனென்றால் இது 2 போட்டிகள் மட்டுமே கொண்ட தொடர் ஆகும். இதில் அடுத்த வாய்ப்பு இல்லாத காரணத்தால் தவறிழைக்க வாய்ப்பில்லை. ஹைதராபாத் ஆடுகளம் சிறப்பானதாக இருக்கும். மேலும் இங்குள்ள வானிலை காரணமாக 5 நாட்களுக்கு இந்த ஆடுகளத்தின் தன்மை ஒரே மாதிரியாக இருக்கும். 

இங்கு சிறப்பாக பேட்டிங் செய்தால் அதிக ரன்களையும், சிறப்பாக பந்துவீசினால் அதிக விக்கெட்டுகளையும் வீழ்த்த முடியும். இளம் வீரர் பிருத்வி ஷாவை யாருடனும் ஒப்பிடாதீர்கள். அவர் வளர இன்னும் நிறைய காலங்களும், சவால்களும் காத்திருக்கின்றன. தற்போதைக்கு அவர் மேல் எவ்வித அழுத்தங்களையும் திணிக்க வேண்டாம் என நினைக்கிறேன். 

பிருத்வி ஷா மிகச்சிறந்த திறமையாளர் என்பதில் சந்தேகமில்லை. இதை அனைவரும் ஒப்புக்கொண்டுள்ளனர். சர்வதேச அளவிலான சவால்களை எதிர்கொள்ளும் அளவுக்கான திறமையும், துணிவும் அவரிடம் உள்ளது. அதை அவரும் தன்னுடைய அறிமுகப் போட்டியிலேயே வெளிப்படுத்தியுள்ளார். 

சிறந்த கற்கும் திறன் கொண்டவர், மிகக் கூரிய சிந்தனை உடையவர். இதில் எங்கள் அனைவருக்கும் மகிழ்ச்சி தான் என்று தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

“மிகவும் வளர்ந்த மாநிலங்களில் ஒன்றாக”... பிகார் முதல்வராகப் பதவியேற்றப் பின் நிதீஷ்குமார்!

செமெரு எரிமலை வெடிப்பு! வீடுகளை இழந்த மக்கள்! | Indonesia

கர்நாடக முதல்வர் பதவியில் மாற்றம்? டி.கே. சிவக்குமாரின் ஆதரவு எம்எல்ஏக்கள் தில்லி பயணம்!

காட்சிக்குப் பின்னால்... நித்யா மெனன்!

Return-தான்! Reject இல்ல! மெட்ரோ நிராகரிப்பு திட்டமிட்ட சதி! : நயினார் நாகேந்திரன் | BJP | DMK

SCROLL FOR NEXT