செய்திகள்

உலக மல்யுத்த சாம்பியன் போட்டி: தரவரிசையில் பஜ்ரங் புனியா

தினமணி

உலக மல்யுத்த சாம்பியன் போட்டி தரவரிசையில் இடம் பெற்ற முதல் இந்திய வீரர் என்ற சிறப்பை பஜ்ரங் புனியா பெற்றுள்ளார்.
 மல்யுத்தம் 65 கிலோ எடைப்பிரிவில் பஜ்ரங் புனியா தொடர்ந்து சிறப்பாக ஆடி வெற்றிகளைக் குவித்து வருகிறார். உலக சாம்பியன் போட்டி வரும் 20 முதல் 28-ஆம் தேதி வரை ஹங்கேரியின் புடாபெஸ்டில் நடைபெறுகிறது. இதில் 65 கிலோ எடை ப்ரீஸ்டைல் பிரிவில் தரவரிசைப் பட்டியலில் மூன்றாவது இடத்தில் பஜ்ரங் புனியா உள்ளார். இந்த உலக சாம்பியன் போட்டியில் தான் முதன்முறையாக தரவரிசைப் பட்டியலை சர்வதேச மல்யுத்த கூட்டமைப்பு வெளியிட்டுள்ளது.
 கடந்த 2017 பாரிஸ் உலக சாம்பியன் போட்டியில் ரேங்கிங் முறை அறிமுகம் செய்யப்பட்டது. துருக்கி வீரர் செல்ஹாட்டின் கிளிசலாயன், ரஷிய வீரர் இலியாஸ் பெபுலட்டோவ் முதலிரண்டு இடங்களில் உள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘நாட்டின் மகள்கள் தோற்றனர். பிரிஜ் பூஷண் வெற்றி’ : சாக்‌ஷி மாலிக் உருக்கம்!

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

ஹாட் ஸ்பாட் ஓடிடியில் எப்போது?

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி தேர்வு செய்யப்பட்டது எப்படி? ரோஹித் சர்மா விரிவான பதில்!

SCROLL FOR NEXT