செய்திகள்

தில்லி ஹாஃப் மாரத்தான் பந்தயம்: எத்தியோப்பிய வீரர்கள் முதலிடம்

தினமணி

தில்லியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஏர்டெல் ஹாஃப்மாரத்தான் பந்தயத்தில் எத்தியோப்பிய வீரர்கள் முதலிடம் பெற்றனர்.
 14-ஆவது முறையாக நடைபெறும் இம்மாரத்தான் பந்தயத்தில்பல்வேறு வயது பிரிவுகளில் 34000 பேர் பங்கேற்று ஓடினர். நேரு விளையாட்டரங்கம் மற்றும் ஜெய் சிங் மார்க் பகுதியில் பந்தயத்தை தடகள வீரர் அதில் சுமரிவாலா, கிரிக்கெட் வீரர் ஜான்டி ரோட்ஸ் தொடங்கி வைத்தனர்.
 ஆடவர் எலைட் பிரிவில் எத்தியோப்பிய வீரர்கள் அன்டம்லாக் பெலிஹு, ஆம்டெவொர்க் வாலெஜன் ஆகியோர் முதலிரண்டு இடங்களைப் பிடித்தனர். பெலிஹு கடந்த ஆண்டு பந்தயத்தில் இரண்டாம் இடம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில் மகளிர் பிரிவில் எத்தியோப்பிய வீராங்கனை டிஹே கெமன்சு 1:06:50 மணி நேரத்தில் ஓடி முதலிடம் பெற்றார். தற்போதைய உலக சாதனையாளர் ஜாய்சீலின் வெள்ளிப் பதக்கம் வென்றார். மூன்று முறை ஒலிம்பிக், 5 முறை உலக சாம்பியனான திருநேஷ் டிபாபா பாதி ஓட்டத்தின் போதே மயக்கமுற்றார்.
 இந்தியர்களுக்கான பந்தயத்தில் ஆடவர் பிரிவில் அபிஷேக் பால் முதலிடமும், மகளிர் பிரிவில் சஞ்சீவனி ஜாதவும் முதலிடம் பெற்றனர்.
 எலைட் பிரிவில் முதலிடம் வென்ற எத்தியோப்பிய வீரர்களுக்கு 27 ஆயிரம் அமெரிக்க டாலர்களும், இந்திய வீரர்களுக்கு தலா ரூ.4 லட்சம் ரொக்கப் பரிசு தரப்பட்டது. இரண்டு மற்றும் மூன்றாம் இடம் பெற்றவர்களுக்கு முறையே ரூ.3, ரூ.2 லட்சம் பரிசளிக்கப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

SCROLL FOR NEXT