செய்திகள்

ரஹானே 144*, இஷான் கிஷன் 114: இந்தியா சி அணி 352 ரன்கள் குவிப்பு!

50 ஓவர்களில் இந்தியா சி அணி, 7 விக்கெட் இழப்புக்கு 352 ரன்கள் எடுத்துள்ளது...

எழில்

தில்லியில் நடைபெற்று வரும் தியோதர் கோப்பை போட்டியில் இந்தியா பி மற்றும் இந்தியா சி அணிகள் மோதி வருகின்றன.

டாஸ் வென்ற இந்தியா சி அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. முதல் விக்கெட்டுக்குச் சிறப்பாக விளையாடிய ரஹானேவும் இஷான் கிஷனும் பலமான கூட்டணி அமைத்து 31 ஓவர்கள் வரை விளையாடி 210 ரன்கள் கூட்டணி அமைத்தார்கள். 87 பந்துகளில் 114 ரன்கள் குவித்த இஷான் கிஷன் முதலில் ஆட்டமிழந்தார். சுப்மன் கில் 26 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கடைசிக் கட்டத்தில் சூர்யகுமார் யாதவ், 18 பந்துகளில் 4 சிக்ஸர் 1 பவுண்டரியுடன் 39 ரன்கள் எடுத்து அசத்தினார். கேப்டன் ரஹானே, 156 பந்துகளில் 144 ரன்கள் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.  40 ஓவர்கள் வரை சற்று நிதானமாக விளையாடிய ரஹானே, கடைசி 10 ஓவர்களில் 29 பந்துகளில் 44 ரன்கள் எடுத்தார்.

50 ஓவர்களில் இந்தியா சி அணி, 7 விக்கெட் இழப்புக்கு 352 ரன்கள் எடுத்துள்ளது. உனாட்கட் 3 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். இந்திய டி20 அணிக்குத் தேர்வாகியுள்ள ஷபாஸ் நதீம், 10 ஓவர்கள் வீசி விக்கெட் எதுவும் எடுக்காமல் 62 ரன்கள் கொடுத்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரசியல் சாசனமே முதன்மையானது: உயா்நீதிமன்ற நீதிபதி என்.சதீஷ்குமாா் பேச்சு

திருப்பூரில் நிலவும் குப்பைப் பிரச்னை: தீா்வு காண முதல்வரிடம் வலியுறுத்துவேன்! மக்களவை உறுப்பினா் கே.சுப்பராயன்

போலி சான்றிதழ் தயாரித்து விற்றவா் மீது வழக்குப் பதிவு

பிடியாணை நிலுவையில் இருந்த 3 நபா்கள் கைது

இளைஞரிடம் ரூ.5.80 லட்சம் மோசடி

SCROLL FOR NEXT