செய்திகள்

கலீல் அகமதுக்கு ஐசிசி கண்டனம்

மேற்கிந்திய தீவுகளுடனான 4-ஆவது ஒருநாள் போட்டியில் விதிமீறலில் ஈடுபட்டதற்காக இந்திய அணியின் இளம் வேகப்பந்துவீச்சாளர் கலீல் அகமதுக்கு ஐசிசி கண்டனம் தெரிவித்துள்ளது.

DIN

மேற்கிந்திய தீவுகளுடனான 4-ஆவது ஒருநாள் போட்டியில் விதிமீறலில் ஈடுபட்டதற்காக இந்திய அணியின் இளம் வேகப்பந்துவீச்சாளர் கலீல் அகமதுக்கு ஐசிசி கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்தியா, மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான 4-ஆவது ஒருநாள் போட்டி மும்பையில் நேற்று (திங்கள்கிழமை) நடைபெற்றது. இதில், இந்திய அணி 224 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் கலீல் அகமது போட்டியின் 14-ஆவது ஓவரில் சாமுவல்ஸை வீழ்த்தினார். அந்த விக்கெட் வீழ்ச்சியை அவர் ஆக்ரோஷமான முறையில் கொண்டாடினார். 

கலீல் அகமது-வின் இந்த உடல் மொழி பேட்ஸ்மேனை ஆக்ரோஷமாக செயல்பட தூண்டும் வகையில் உள்ளதாக ஐசிசி குற்றம்சாட்டியுள்ளது. அதனால், ஐசிசி விதி 2.5-ன் படி அவருக்கு 1 புள்ளி அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. 

போட்டி முடிந்த பிறகு, போட்டியின் கள நடுவர்கள் இயான் கூல்ட், அனில் சௌத்ரி, 3-ஆவது நடுவர் பால் வில்சன் மற்றும் 4-ஆவது நடுவர் செட்டிதோடி சம்சுதின் ஆகியோர் இந்த குற்றச்சாட்டை எழுப்பினர். கலீல் அகமது போட்டி நடுவர் கிறிஸ் பிராட்டிடம் தனது தவறை ஒப்புக்கொண்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அனில் அம்பானியால் எஸ்பிஐ-க்கு ரூ. 2,929 கோடி இழப்பு: சிபிஐ சோதனை முடிவு!

ஜன நாயகனில் புஸ்ஸி ஆனந்த்?

அமித் ஷாவுடன் சி. பி. ராதாகிருஷ்ணன் ஆலோசனை!

15 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை கனமழைக்கு வாய்ப்பு

சத்தீஸ்கர் முன்னாள் முதல்வரின் மகனுக்கு 14 நாள் நீதிமன்றக் காவல்!

SCROLL FOR NEXT