செய்திகள்

மீண்டும் சொதப்பிய இந்திய பேட்ஸ்மேன்கள்: 4-ம் டெஸ்ட் ஹைலைட்ஸ்!

எழில்

இந்தியா - இங்கிலாந்து இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் நான்காவது ஆட்டம் செளதாம்ப்டன் ரோஸ் பெளல் மைதானத்தில் வியாழக்கிழமை தொடங்கியது. இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 246 ரன்களை எடுத்தது. இந்திய பந்துவீச்சாளர் பும்ரா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

இந்திய அணி தடுமாற்றத்துடன் ஆடி அனைத்து விக்கெட்டையும் இழந்து முதல் இன்னிங்ஸில் 273 ரன்களைக் குவித்தது. இந்திய வீரர் சேதேஸ்வர் புஜாரா அபாரமாக ஆடி 132 ரன்களை எடுத்தார். இங்கிலாந்து வீரர் மொயின் அலி அபாரமாக பந்துவீசி 5 விக்கெட்டை வீழ்த்தினார்.  பின்னர் இங்கிலாந்து அணி தனது இரண்டாவது இன்னிங்கிஸில் 96.1 ஓவர்களில் 271 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அணியில் அதிகபட்சமாக ஜோஸ் பட்லர் 60 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இந்திய தரப்பில் முகமது ஷமி 4 விக்கெட்டுகள் சாய்த்தார். பின்னர் 245 ரன்களை இலக்காகக் கொண்டு ஆடத் தொடங்கிய இந்தியாவின் பேட்டிங் வரிசை, ஆரம்பம் முதலே ஆட்டம் காணத் தொடங்கியது. இந்தியா, 69.4 ஓவர்களில் 184 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அணியில் அதிகபட்சமாக கேப்டன் கோலி மட்டும் 58 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்து தரப்பில் மொயீன் அலி 4 விக்கெட்டுகள் சாய்த்தார். இதையடுத்து, 4-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து 60 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 5 போட்டிகளைக் கொண்ட இந்தத் தொடரில் 3-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்ற இங்கிலாந்து, தொடரையும் தன் வசமாக்கியது.

4-ம் நாள் ஆட்டத்தின் ஹைலைட்ஸ்...

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உக்ரைன் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும்: ஜெர்மன் வெளியுறவு அமைச்சர்!

’எனக்குப் பின் யார்..?’ -பிரதமர் மோடி யாரைச் சுட்டிக்காட்டுகிறார்?

அன்பே, நீ கலைகளின் தொகுப்பு... சாக்க்ஷி மாலிக்!

‘கீழ்த்தரமான பேச்சு’: பாஜக வேட்பாளர் பிரசாரம் செய்ய தடை!

கடலோரக் கவிதை!

SCROLL FOR NEXT