டாஸில் மீண்டும் தோற்றார் கோலி: இங்கிலாந்து பேட்டிங்!
இந்திய அணியில் இரு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அஸ்வினுக்குப் பதிலாக ஜடேஜாவும் பாண்டியாவுக்குப் பதிலாக அறிமுக வீரர் ஹனுமா விஹாரியும்...
இங்கிலாந்துக்கு எதிராக டெஸ்ட் தொடரை இழந்த நிலையில் லண்டன் ஓவல் மைதானத்தில் இன்று 5-வது டெஸ்ட் தொடங்கியுள்ளது. 5 டெஸ்ட் ஆட்டங்கள் கொண்ட தொடரை இங்கிலாந்து 3-1 என கைப்பற்றி விட்டது. மூன்றாவது டெஸ்டில் இந்தியா அபார வெற்றி பெற்ற நிலையில் செளதாம்ப்டன் டெஸ்டில் இந்தியா வென்று தொடரை சமன் செய்யும் எனக் கருதப்பட்டது. ஆனால் 60 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவி தொடரையும் இழந்தது. இங்கிலாந்தின் தலைசிறந்த தொடக்க ஆட்டக்காரர்களில் ஒருவரான அலிஸ்டர் குக் இந்த டெஸ்ட் ஆட்டத்துடன் விடைபெறுகிறார்.
டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது. இந்தத் தொடரில் விராட் கோலி அனைத்து டாஸிலும் தோற்றுள்ளார்.
இந்திய அணியில் இரு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அஸ்வினுக்குப் பதிலாக ஜடேஜாவும் பாண்டியாவுக்குப் பதிலாக அறிமுக வீரர் ஹனுமா விஹாரியும் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்கள். விஹாரி, இந்தியாவின் 292-வது டெஸ்ட் வீரர் ஆகியுள்ளார்.
Advertisement