செய்திகள்

முதல் டி20: இலங்கையை வென்றது இந்திய மகளிர் அணி

DIN

இலங்கையுடனான முதல் டி20 போட்டியில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய மகளிர் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் மற்றும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. ஒருநாள் தொடரை இந்திய அணி 2-1 என கைப்பற்றியது. இதையடுத்து, இரு அணிகளுக்கிடையிலான முதல் டி20 போட்டி இன்று (புதன்கிழமை) நடைபெற்றது. 

இதில், டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் இந்திய அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி முதலில் பேட் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 168 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக தானியா பாட்டியா 46 ரன்களும், ஜெமிமா ரோட்ரிக்ஸ் மற்றும் அனுஜா பாட்டீல் தலா 36 ரன்களையும் எடுத்தனர். 

இதையடுத்து, 169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது. ஆனால், 19.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து அந்த அணி 155 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணி சார்பில் அபாரமார பந்துவீசிய பூனம் யாதவ் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன்மூலம், இந்திய அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

இந்தப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி 1-0 என முன்னிலை வகிக்கிறது. இருஅணிகளுக்கிடையிலான 2-ஆவது டி20 போட்டி வருகிற வெள்ளிக்கிழமை கொழும்புவில் நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

குங்குமப்பூவும் கொஞ்சும் விழிகளும்..

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

SCROLL FOR NEXT