செய்திகள்

சீன ஓபன் பாட்மிண்டன்: ஸ்ரீகாந்த், சிந்து முன்னேற்றம்

DIN

சீன ஓபன் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் ஸ்ரீகாந்த் மற்றும் சிந்து ஆகியோர் அடுத்த சுற்றுக்கு முன்னேறினர். 

சீன ஓபன் பாட்மிண்டன் போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் ஸ்ரீகாந்த் தாய்லாந்து வீரர் சுபான்யூ அவிஹிங்சானானை எதிர்கொண்டார். சுமார் 1 மணி நேரம் நடைபெற்ற இந்தப் போட்டியில் ஸ்ரீகாந்த் 21-12, 15-21, 24-22 என்ற நேர் செட் கணக்கில் போராடி வெற்றி பெற்றார்.   

மகளிர் ஒற்றையர் பிரிவில் பி.வி.சிந்து தாய்லாந்தின் புசனான் ஓங்பம்ரங்ஃபனை எதிர்கொண்டார். அதில், சிந்து 21-23, 21-13, 21-18 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். 

கலப்பு இரட்டையர் பிரிவில் சாத்விக்சாய்ராஜ் ரான்கி ரெட்டி மற்றும் அஷ்வினி  பொன்னப்பா இணை சீன இணையிடம் 14-21, 11-21 என்கிற நேர் செட் கணக்கில் தோல்வியடைந்தனர். ஆடவர் இரட்டையர் பிரிவில் மனு ஆத்ரி மற்றும் சுமீத் ரெட்டி சீன தைபே இணையிடம் 9-21, 10-21 என்கிற நேர் செட் கணக்கில் தோல்வியடைந்து வெளியேறினர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT