செய்திகள்

சீன ஓபன் பாட்மிண்டன்: காலிறுதிச் சுற்றில் ஸ்ரீகாந்த், சிந்து தோல்வி

DIN

சீன ஓபன் பாட்மிண்டன் காலிறுதிச் சுற்றில் இந்தியாவின் ஸ்ரீகாந்த் மற்றும் சிந்து காலிறுதிச் சுற்றில் தோல்வியடைந்து வெளியேறினர்.

சீன ஓபன் பாட்மிண்டன் போட்டியின் காலிறுதிச் சுற்று போட்டிகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் ஸ்ரீகாந்த் ஜப்பான் வீரர் கென்டோ மொமோடாவை எதிர்கொண்டார். வெறும் 28 நிமிடங்கள் மட்டுமே நடைபெற்ற இந்த காலிறுதிச் சுற்றில் ஸ்ரீகாந்த் 9-21, 11-21 என்ற நேர் செட் கணக்கில் தோல்வியடைந்து தொடரில் இருந்து வெளியேறினார். இது ஸ்ரீகாந்துக்கு எதிராக மொமோடோ தொடர்ச்சியாக வெல்லும் 5-ஆவது போட்டியாகும். 

மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து சீன வீராங்கனை சென் யூஃபெய்-ஐ எதிர்கொண்டார். இதில், முதல் செட்டில் சிறப்பாக விளையாடிய சிந்து அதனை 21-11 என்ற புள்ளிக் கணக்கில் கைப்பற்றினார். இதையடுத்து, எழுச்சி கண்ட சென் யூஃபெய் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 21-11, 21-15 என அடுத்தடுத்த 2 செட்களை கைப்பற்றி வெற்றி பெற்றார். இதன்மூலம், சிந்துவும் அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்து தொடரில் இருந்து வெளியேறினார். 

இந்த தொடரில் மற்ற இந்திய வீரர், வீராங்கனைகள் அனைவரும் வெளியேறிய நிலையில், பட்டம் வெல்லும் கடைசி வாய்ப்பாக ஸ்ரீகாந்த் மற்றும் சிந்துவை மட்டுமே நம்பப்பட்டது. தற்போது, இவர்களும் காலிறுதிச் சுற்றில் இருந்து வெளியேறியுள்ளது இந்தியாவுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.800 குறைந்தது

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

SCROLL FOR NEXT