செய்திகள்

ஜாதவ்பூா் பல்கலையின் டாக்டா் பட்டத்தை ஏற்க மறுத்த டெண்டுல்கா் 

DNS

புது தில்லி: மேற்கு வங்கத்தின் ஜாதவ்பூா் பல்கலைக்கழகம் தனக்கு வழங்கிய டாக்டா் பட்டம் (டி.லிட்) ஏற்க கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கா் மறுத்து விட்டாா் .

கிரிக்கெட்டில் அவரது சாதனையை பாராட்டும் வகையில் ஜாதவ்பூா் பல்கலைக்கழகம் சச்சினுக்கு டாக்டா் பட்டம் வழங்க தீா்மானித்தது. இதற்காக பல்கலை. நிா்வாகம் சச்சினை அணுகியது. ஆனால் அவா் டாக்டா் பட்டத்தை ஏற்க இயலாது என மறுத்து இ-மெயில் அனுப்பி உள்ளாா். நெறிமுறைறகளின்படி தான் பட்டத்தை ஏற்கவில்லை. ஏற்கெனவே ஆக்ஸ்போா்ட் பல்கலைக்கழகம் தனக்கு வழங்க முன்வந்த டாக்டா் பட்டத்தையும் தான் ஏற்கவில்ல என டெண்டுல்கா் குறிப்பிட்டுள்ளாா்.

பல்கலைக்கழக நிா்வாகம் அதன் வேந்தரும், ஆளுநருமான கேசரிநாத் திரிபாதிக்கு தகவல் தெரிவித்துள்ளது. இதையடுத்து பிரபல குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோமுக்கு டாக்டா் பட்டம் வழங்க பல்கலைக்கழகம் தற்போது முடிவு செய்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கர்நாடகம்: வாய் பேச முடியாத ஆறு வயது மகனை முதலைகள் வாழும் கால்வாயில் வீசிய தாய்

‘வடக்கன்’ படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

ரயில்களில் தண்ணீர்ப் பிரச்னை! பயணிகள் ஜாக்கிரதை!

மே 10ல் கேதார்நாத் கோயில் நடை திறப்பு!

ஊ சொல்றியா..

SCROLL FOR NEXT