101-வது பட்டம் வென்ற ஃபெடரர்: உலக சாதனையை நிகழ்த்துவாரா?
இன்னும் 9 பட்டங்களை வென்றால் 110 பட்டங்களுடன் ஜிம்மி கான்னர்ஸின் அதிகபட்சமான 109 பட்டங்களின் சாதனையைத் தாண்டி...
மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியில் வென்றத்தின் மூலம் தனது 101-வது பட்டத்தை வென்றார் ரோஜர் ஃபெடரர்.
ஞாயிற்றுக்கிழமை இரவு மியாமியில் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ஜான் ஐஸ்நரை எதிர்கொண்ட உலகின் நான்காம் நிலை வீரர் ஃபெடரர் 6-1, 6-4 என்ற நேர் செட்களில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார். இது மியாமியில் அவரது 4-வது பட்டமாகும். இதன் மூலம் அவர் தனது 101-வது பட்டத்தை வென்றுள்ளார்.
இன்னும் 9 பட்டங்களை வென்றால் 110 பட்டங்களுடன் ஜிம்மி கான்னர்ஸின் அதிகபட்சமான 109 பட்டங்களின் சாதனையைத் தாண்டிச் செல்வார் 37 வயது ஃபெடரர்.
20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ள ஃபெடரர், விரைவில் அந்தச் சாதனையை நிகழ்த்துவார் என்கிற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
ரோஜர் ஃபெடரரின் சாதனைகள்
- 101 பட்டங்கள் (முதல் இடத்தில் ஜிம்மி கான்னர்ஸ், 109 பட்டங்கள்)
- 28 மாஸ்டர் பட்டங்கள் (நடால் 33, ஜோகோவிச் 32 பட்டங்களை வென்றுள்ளார்கள்)
- 20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள் (அடுத்த இடத்தில் நடால் - 17 பட்டங்கள்)