முகப்பு
செய்திகள்

உலகக் கோப்பைக்கான இந்திய அணியிலிருந்து நீக்கம்: அம்பட்டி ராயுடு என்ன சொல்கிறார்?

2015 உலகக் கோப்பைப் போட்டியில் மாற்று விக்கெட் கீப்பராக இந்திய அணியில் இடம்பிடித்த ராயுடு...

Updated On : 31 ஜனவரி, 2024 at 7:40 AM
பகிர்:

ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை 2019 வரும் மே 30 முதல் ஜூலை 14-ம் தேதி வரை இங்கிலாந்தில் நடைபெறவுள்ளது. உலகக் கோப்பைக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. விராட் கோலி தலைமையிலான 15 பேர் கொண்ட அணியை மும்பையில் நேற்று அறிவித்தது பிசிசிஐ. 2015 உலகக் கோப்பையில் இடம்பெற்ற தோனி, தவன், ஜடேஜா, விராட் கோலி, புவனேஸ்வர் குமார், முஹமது ஷமி, ரோஹித் சர்மா ஆகிய 7 வீரர்களுக்கு இந்தமுறையும் மீண்டும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. தினேஷ் கார்த்திக், விஜய் சங்கர் ஆகிய இரு தமிழ்நாட்டு வீரர்களும் அணியில் இடம்பெற்றுள்ளார்கள்.

2015 உலகக் கோப்பைப் போட்டியில் மாற்று விக்கெட் கீப்பராக இந்திய அணியில் இடம்பிடித்த ராயுடு, இந்தமுறை தேர்வாகவில்லை. அவருக்குப் பதிலாக விஜய் சங்கர் தேர்வாகியுள்ளதாகத் தேர்வுக்குழுத் தலைவர் பிரசாத் கூறியுள்ளார். 

இந்நிலையில் தன்னுடைய நீக்கம் குறித்து ட்விட்டரில் மறைமுகமாக தன்னுடைய வருத்தத்தைப் பதிவு செய்துள்ளார் ராயுடு. அவர் கூறியுள்ளதாவது:

உலகக் கோப்பைப் போட்டியை (வீட்டிலிருந்து) பார்க்க இப்போதுதான் 3டி கண்ணாடிகளை ஆர்டர் செய்துள்ளேன் என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.