செய்திகள்

ஆசிய பாட்மிண்டன்: காலிறுதியில் சிந்து, சாய்னா, சமீர் வர்மா

ஆசிய பாட்மிண்டன் சாம்பியன் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து, சமீர் வர்மா ஆகியோர் காலிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.

DIN

ஆசிய பாட்மிண்டன் சாம்பியன் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து, சமீர் வர்மா ஆகியோர் காலிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.
சீனாவின் உஹான் நகரில் நடைபெற்று வரும் இப்போட்டியின் இரண்டாம் சுற்று ஆட்டங்கள் வியாழக்கிழமை நடைபெற்றன. மகளிர் பிரிவில் பி.வி.சிந்து 21-15, 21-19 என்ற கேம் கணக்கில் இந்தோனேஷியாவின் சாய்ரின்னிஸாவை வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.
காலிறுதியில் அவர் சீனாவின் கை யன்யனை எதிர்கொள்கிறார்.
சாய்னா நெவால்: மற்றொரு ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் இந்திய நட்சத்திரம் சாய்னா நெவால் 21-13, 21-13 என்ற கேம் கணக்கில் கிம் ஜா இன்னை வீழ்த்தினார்.
காலிறுதியில் அவர் உலகின் 4-ஆம் நிலை வீராங்கனை அகேன் யமகுச்சியை எதிர்கொள்கிறார். ஆடவர் பிரிவில் இந்தியாவின் சமீர் வர்மா 21-12, 21-19 என்ற கேம் கணக்கில் ஹாங்காங்கின் கா லோங் ஆக்னைûஸ வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார். 
கலப்பு இரட்டையர் பிரிவில் உத்கர்ஷ் அரோரா-கரிஷ்மா 10-21, 15-21 என்ற கேம் கணக்கில் இந்தோனேஷிய இணையிடம் தோல்வியுற்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்!

கான்வே 2-ஆவது இரட்டைச் சதம்; நியூஸிலாந்து 575/8-க்கு ‘டிக்ளோ்’

இறுதி ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் பலப்பரீட்சை

தேசிய துப்பாக்கி சுடுதல்: லக்ஷிதா, ஷா்வன் இணைக்கு தங்கம்

சென்னையில் 14.25 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

SCROLL FOR NEXT