செய்திகள்

 3-ஆவது ஒருநாள் ஆட்டம் 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி; தொடரையும் கைப்பற்றியது

DIN

மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு எதிரான  3 வது ஒருநாள் போட்டியில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஆஃப் ஸ்பெயினில் புதன்கிழமை நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற மே.இ.தீவுகள் பேட்டிங்கை தேர்வு செய்தது. பலத்த மழையால் பாதிக்கப்பட்ட ஆட்டம், பின்னர் மழை நின்றதும் 35 ஓவர்களாக குறைக்கப்பட்டு தொடங்கப்பட்டது.

மே.இ.தீவுகள் அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய கிறிஸ் கெயில், எவின் லெவிஸ் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 
அபாரமாக ஆடிய கிறிஸ் கெயில் தனது 54-ஆவது ஒருநாள் அரைசதத்தை பதிவு செய்தார்.  10-ஆவது ஓவர் முடிவில் விக்கெட் இழப்பின் 114 ரன்களை எடுத்திருந்தது மே.இ.தீவுகள்.
5 சிக்ஸர், 8 பவுண்டரியுடன் 41 பந்துகளில் 72 ரன்களை விளாசிய கெயிலை அவுட்டாக்கினார் கலீல் அகமது. 3 சிக்ஸர், 5 பவுண்டரியுடன் 29 பந்துகளில் 43 ரன்களை விளாசிய எவின் லெவிஸ், சஹல் பந்தில் தவனிடம் கேட்ச் தந்து வெளியேறினார்.
மழையால் 35 ஓவர்களாக குறைப்பு: 25 ரன்கள் எடுத்திருந்த ஷிம்ரனை போல்டாக்கினார் ஷமி. அவருக்கு பின் ஜடேஜா பந்தில் 24 ரன்களுடன் ஷாய் ஹோப்பும் போல்டானார். 
3 சிக்ஸர், 1 பவுண்டரியுடன் அதிரடியாக ஆடி 30 ரன்களை குவித்து பூரணும், கேப்டன் ஹோல்டர் 14, பிராத்வெயிட் 16 ரன்களுடனும் வெளியேறினர்.  அப்போது 7 விக்கெட் இழப்புக்கு 221 ரன்களுடன் இருந்தது மே.இ.தீவுகள்.
பேபியன் ஆலன் ரன்களுடன் களத்தில் இருந்தனர். 35 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 240 ரன்களை எடுத்தது மே.இ.தீவுகள்.

இந்திய அணிக்கு  255 ரன்கள் இலக்கு 
255 ரன்களை இலக்காக கொண்டு களமிறங்கிய இந்திய அணி 32.3 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 256 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. அணியில் விராட் கோலி சதம் அடித்துள்ளார். அதிகபட்சமாக ரோஹித் சர்மா 10, ஷிகர்தவண்36, விராட் கோலி 114, ஷ்ரேயஸ் ஐயர்65,  கேதார் ஜாதவ் 19 என ரன்களை எடுக்க 32.3 ஓவரில் 256 ரன்களை எடுத்து இந்தியா வெற்றி பெற்றது.

இந்திய-மே.இ.தீவுகள் முதல் ஒருநாள் ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது. இரண்டாவது ஒருநாள் ஆட்டத்தில் இந்திய அணி டிஎல் முறையில் 59 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. புதன்கிழமை நடைபெற்ற மூன்றாவது  ஒருநாள் ஆட்டத்தி இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதன் மூலம் தொடரையும் கைப்பற்றியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகள் சீரமைப்பு

ஹைதராபாத் பல்கலை. மாணவர் ரோஹித் வெமுலா ‘தலித்’ அல்ல: மறுவிசாரணை நடத்த முடிவு!

மேற்கு வங்க ஆளுநா் மீது பாலியல் குற்றச்சாட்டு: 8 பேர் கொண்ட விசாரணை குழு அமைப்பு

பிறந்தநாள் வாழ்த்துகள் த்ரிஷா!

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

SCROLL FOR NEXT