செய்திகள்

ஆஷஸ் 2-ஆவது டெஸ்ட்:  இங்கிலாந்து 266 ரன்கள் முன்னிலை

DIN

இங்கிலாந்து-ஆஸ்திரேலியா இடையிலான ஆஷஸ் தொடர் 2-ஆவது டெஸ்ட் ஆட்டத்தில் இங்கிலாந்து 266 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
5 ஆட்டங்கள் கொண்ட இத்தொடரில் முதல் ஆட்டத்தில் ஆஸி. 251 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இரண்டாவது ஆட்டம் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது. முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து 258 ரன்களுக்கும், ஆஸி. 250 ரன்களுக்கும் ஆல் அவுட்டாயின. முதல் நாள் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டது.
இங்கிலாந்து 258/5 டிக்ளேர்:
இதற்கிடையே 2-ஆவது இன்னிங்ûஸ தொடங்கிய இங்கிலாந்து ஐந்தாவது நாளான ஞாயிற்றுக்கிழமை 71 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 258 ரன்களை எடுத்து டிக்ளேர் செய்தது. பென் ஸ்டோக்ஸ் அற்புதமாக ஆடி 3 சிக்ஸர், 11 பவுண்டரியுடன் 165 பந்துகளில் 115 ரன்களை விளாசினார் அவுட்டாகாமல் இருந்தார். ஜோஸ் பட்லர் 31, பேர்ஸ்டோ 30, ரோரி பர்ன்ஸ் 29 ரன்களை சேர்த்தனர். 
ஆஸி. தரப்பில் பேட் கம்மின்ஸ் 3-35, சிடில 2-54 விக்கெட்டுகளை சாய்தனர். இதைத் தொடர்ந்து ஆஸி. அணி தனது 2-ஆவது இன்னிங்ûஸ ஆடத் தொடங்கியது. 48 ஓவர்களில் 267 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய அந்த அணியில் தொடக்க வீரர் வார்னர் 5 ரன்களிலும், உஸ்மான் காஜா 2 ரன்களிலும் ஆர்ச்சர் பந்தில் அவுட்டாயினர்.
ஸ்மித் விலகல்: ஆஸி. அணியின் அதிரடி பேட்ஸ்மேன்களில் ஒருவரான ஸ்டீவ் ஸ்மித், முதல் இன்னிங்ஸில் ஜோஃப்ரா ஆர்ச்சர் வீசிய பவுன்சரில் காயமடைந்தார். 92 ரன்களை விளாசிய ஸ்மித்துக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் அவரால் ஆட முடியாது என அறிவிக்கப்பட்டது. 148.7 கி.மீ வேகத்தில் ஆர்ச்சர் வீசிய பந்து ஸ்மித்தை பதம் பார்த்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கமல்ஹாசன் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்!

நிதீஷ் ரெட்டி, டிராவிஸ் ஹெட் அரைசதம்: ராஜஸ்தானுக்கு 202 ரன்கள் இலக்கு!

‘நாட்டின் மகள்கள் தோற்றனர். பிரிஜ் பூஷண் வெற்றி’ : சாக்‌ஷி மாலிக் உருக்கம்!

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

SCROLL FOR NEXT