செய்திகள்

ஒலிம்பிக் ஹாக்கி டெஸ்ட்: ஆஸி.யுடன் டிரா செய்தது இந்தியா

DIN

ஒலிம்பிக் ஹாக்கி டெஸ்ட் போட்டியில் மகளிர் பிரிவில் உலகின் 2ஆம் நிலை அணியான ஆஸ்திரேலியாவுடன் 2-2 என்ற கோல் கணக்கில் டிரா செய்தது இந்தியா.
ஒலிம்பிக் தகுதிச் சுற்றுக்கு தயாராகும் வகையில் டோக்கியோவில் டெஸ்ட் போட்டிகள் ஆடவர், மகளிர் அணிகளுக்கு நடைபெற்று வருகின்றன. ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மகளிர் பிரிவு ரவுண்ட் ராபின் ஆட்டம் ஒன்றில் வலுவான ஆஸி.யுடன் மோதியது இந்தியா.
ஆஸி. வீராங்கனை கேத்லீன் நோப்ஸ் 14-ஆவது நிமிடத்திலும், இந்திய வீராங்கனை வந்தனா கட்டாரியா 36-ஆவது நிமிடத்திலும் கோலடித்தனர்.
அதன்பின் ஆஸி.யின் கிரேஸ் 43-ஆவது நிமிடத்தில் கோலடித்து முன்னிலை பெறச் செய்தார். 
இதைத் தொடர்ந்து தீவிரமாக போராடிய இந்திய அணி தரப்பில் குர்ஜித் கெளர் 59-ஆவது நிமிடத்தில் கோலடித்து சமநிலை ஏற்படச் செய்தார். இறுதியில் 2-2 என டிராவில் முடிந்தது.
ஏற்கெனவே முதல் ஆட்டத்தில் ஜப்பானை 2-1 என வென்றது இந்தியா. சீனாவுடன் செவ்வாய்க்கிழமை அடுத்த ஆட்டத்தில் மோதுகிறது இந்தியா.
ஆடவர் பிரிவில் இந்தியா தோல்வி: ஆடவர் பிரிவில் இந்திய அணி 1-2 என்ற கோல் கணக்கில் நியூஸிலாந்திடம் வீழ்த்தியது.  எனினும் இறுதிச் சுற்று வாய்ப்பை தக்க வைத்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாழப்பாடி காவல் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சிறுவன்

ஒசூரில் கடும் குடிநீா் தட்டுப்பாட்டு: நடவடிக்கை எடுக்க முன்னாள் எம்எல்ஏ வலியுறுத்தல்

பணம் பறித்த இருவரை அடைத்து வைத்து கொலை மிரட்டல்: இருவா் கைது

தேய்பிறை அஷ்டமி சிறப்பு யாகம்

திமுக சாா்பில் தண்ணீா்ப் பந்தல் திறக்க வேண்டுகோள்

SCROLL FOR NEXT