செய்திகள்

இந்திய அணியில் அஸ்வின் இல்லையா? டிவிட்டரில் கொந்தளிக்கும் ரசிகர்கள்

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் ஆட்டத்தில் அஸ்வின் சேர்க்கப்படாததற்கு இந்திய ரசிகர்கள் டிவிட்டரில் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.

DIN

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் ஆட்டத்தில் அஸ்வின் சேர்க்கப்படாததற்கு இந்திய ரசிகர்கள் டிவிட்டரில் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். 

மேற்கிந்தியத் தீவுகள், இந்தியா அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் ஆட்டம் ஆண்டிகுவாவில் இன்று (வியாழக்கிழமை) தொடங்கியது. டாஸ் வென்ற மேற்கிந்தியத் தீவுகள் கேப்டன் ஜேசன் ஹோல்டர் முதலில் இந்திய அணியை பேட்டிங் செய்ய அழைத்தார். இந்திய அணியின் விளையாடும் லெவனில் ரோஹித் சர்மா மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் சேர்க்கப்படவில்லை. 

எனவே, அஸ்வின் சேர்க்கப்படாததற்கு இந்திய ரசிகர்கள் டிவிட்டரில் கடும் எதிர்ப்புகளைப் பதிவு செய்து வருகின்றனர். மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக சிறப்பான சாதனைகளை புரிந்துள்ள அஸ்வின் சேர்க்கப்படவில்லையே என அவரது சாதனையைக் குறிப்பிட்டு பிரத்யேகமாக பதிவு செய்து வருகின்றனர். ஒரு சிலர், பேட்டிங்கில் நல்ல நிலையில் இருக்கும் ரோஹித் சர்மாவும் அணியில் சேர்க்கப்படாதது ஆச்சரியமளிக்கிறது என்று டிவிட்டரில் தெரிவித்து வருகின்றனர்.

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக அஸ்வினின் சாதனை:

டெஸ்ட் ஆட்டங்கள்: 11

பேட்டிங்:

ரன்கள்: 552

பேட்டிங் சராசரி 50.18

சதம்/அரைசதம்: 4/0

பந்துவீச்சு:

விக்கெட்டுகள்: 60

சராசரி: 21.85

5 விக்கெட்டுகள்/10 விக்கெட்டுகள்: 4/0

முதல் டெஸ்டில் இந்திய அணியின் விளையாடும் லெவன்:

  1. கேஎல் ராகுல்
  2. மயங்க் அகர்வால் 
  3. சேத்தேஷ்வர் புஜாரா
  4. விராட் கோலி
  5. அஜின்கியா ரஹானே
  6. ஹனுமா விஹாரி
  7. ரிஷப் பந்த்
  8. ரவீந்திர ஜடேஜா
  9. இஷாந்த் சர்மா
  10. முகமது ஷமி
  11. ஜஸ்பிரீத் பூம்ரா

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குவஹாத்தி சர்வதேச விமான முனையம் நவம்பரில் திறப்பு!

டிஆர்டிஓ-இல் ஐடிஐ, டிப்ளமோ முடித்தவர்களுக்கு அப்ரண்டிஸ் பயிற்சி

கவின் கொலை வழக்கு: நீதிமன்றத்தில் சுர்ஜித், அவரது தந்தை சரவணன் ஆஜர்!

மழையின் வாசம்... சௌந்தர்யா ரெட்டி!

பிகார் வாக்காளர் பட்டியல்: எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டம்!

SCROLL FOR NEXT