செய்திகள்

இன்று தொடங்கும் மூன்று டெஸ்ட் ஆட்டங்கள்!

ஒருநாள் உலகக் கோப்பை தாக்கம் உங்களிடமிருந்து மறைந்துவிட்டது அல்லவா! அடுத்ததாக டெஸ்ட் ஆட்டங்களுக்கு உங்களைத் தயார்படுத்திக்கொள்ளுங்கள்.

எழில்

ஒருநாள் உலகக் கோப்பை தாக்கம் உங்களிடமிருந்து மறைந்துவிட்டது அல்லவா! அடுத்ததாக டெஸ்ட் ஆட்டங்களுக்கு உங்களைத் தயார்படுத்திக்கொள்ளுங்கள்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி ஆகஸ்ட் 1 முதல் தொடங்கி பரபரப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் இன்று ஒரே நாளில் மூன்று டெஸ்ட் ஆட்டங்கள் தொடங்குகின்றன.

கொழும்பில் இலங்கை - நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் ஆட்டம் காலை 10 மணிக்குத் (இந்திய நேரம்) தொடங்கியுள்ளது. இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்துவருகிறது. 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என இலங்கை முன்னணியில் உள்ளது. 

அடுத்ததாக, இந்திய நேரம் மாலை 3.30 மணிக்கு ஆஷஸ் டெஸ்ட் தொடரின் மூன்றாவது டெஸ்ட் ஆட்டம் தொடங்கியுள்ளது. ஆஸ்திரேலிய அணி 1-0 என முன்னணியில் உள்ளது.

இந்திய நேரம் இரவு 7 மணிக்கு இந்தியா- மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான இரு ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடர் தொடங்குகிறது. இந்த டெஸ்ட் தொடரை இந்திய அணி வெல்லும் என்கிற எதிர்பார்ப்பு நிலவுகிறது. 

இன்று தொடங்கும் டெஸ்ட் ஆட்டங்கள் (இந்திய நேரம்)

#SLvNZ காலை 10 மணி
#Ashes மாலை 3.30
#WIvInd இரவு 7 மணி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எதிலும் வெற்றி இவர்களுக்கு: தினப்பலன்கள்!

பூந்தமல்லி - சுங்குவாா்சத்திரம் அரசுப் பேருந்து மப்பேடு வரை நீட்டிப்பு

முதல்வரின் தாயுமானவா் திட்டம்: திருவள்ளூா் மாவட்டத்தில் இன்று தொடக்கம்

கூட்டுறவு சங்க உதவியாளா் பணித் தோ்வு: நுழைவுச் சீட்டு வெளியீடு!

சென்னை மாநகராட்சி அரையாண்டு வரி வருவாய் ரூ.1,002 கோடி!

SCROLL FOR NEXT