செய்திகள்

179 ரன்களுக்குச் சுருண்ட ஆஸ்திரேலிய அணி! 6 விக்கெட்டுகள் எடுத்த ஆர்ச்சர் (விடியோ)

ஆஷஸ் 3-வது டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 52.1 ஓவர்களில் 179 ரன்களுக்குச் சுருண்டது.

எழில்

ஆஷஸ் 3-வது டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 52.1 ஓவர்களில் 179 ரன்களுக்குச் சுருண்டது. 

ஆஷஸ் டெஸ்ட் தொடரின் மூன்றாவது டெஸ்ட் ஆட்டம் நேற்று லீட்ஸில் தொடங்கியது. ஆஸ்திரேலிய அணி 1-0 என முன்னணியில் உள்ளது.

டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. தொடக்க வீரர் வார்னர், லபுசான் ஆகிய இருவரைத் தவிர இதர வீரர்கள் அனைவரும் வந்த வேகத்தில் பெவிலியனுக்குத் திரும்பினார்கள். வார்னர் 61 ரன்களும் லபுசான் 74 ரன்களும் எடுத்தார்கள். ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 52.1 ஓவர்களில் 179 ரன்களுக்குச் சுருண்டது.  இந்த டெஸ்டிலும் இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ஆர்ச்சர் அற்புதமாகப் பந்துவீசி 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பிராடுக்கு 2 விக்கெட்டுகள் கிடைத்தன. மழை காரணமாக நேற்று குறைவான ஓவர்களே வீசப்பட்டன. இதனால் இங்கிலாந்து அணியால் 2-வது இன்னிங்ஸை நேற்று தொடங்கமுடியவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆட்டோவில் சென்ற ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு!

கவினின் மரணம் கடைசியாக இருக்குமா? அஞ்சலி செலுத்தியபின் Seeman பேட்டி!

ஆகஸ்ட் 11 முதல் இபிஎஸ் 3ம் கட்ட சுற்றுப்பயணம்

திடக்கழிவு மேலாண்மை: முதல்வர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்!

கல் எறிந்தவருக்கும் பேறு...

SCROLL FOR NEXT